பெஞ்ச் பிரஸ்
Author: மதன்
எந்த பயிற்சி செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று தெரிந்து கொண்டு பயிற்சி செய்தால் அதில் கிடைக்கும் பலன் அதிகமாக இருக்கும். புராணங்களில் வரும் வலிமையானவர்களை நிமிர்ந்த நெஞ்சுடையான் அகன்ற மார்புடையான் என்று குறிப்பிட்டிருப்பார்கள். பல அரசாங்க வேலைக்கு கூட மார்பளவு மிக முக்கியமானதாக இருக்கிறது. இத்தனை சிறப்பு வாய்ந்த மார்பின் (Chest) வளர்ச்சிக்கு மிக முக்கியமான பயிற்சி தான் “பென்ச் பிரஸ்” பயிற்சி.
ஒரு 8 அங்குல சமதள (Flat) பெஞ்சில் படுத்துக் கொண்டு போதுமான அளவு எடையுள்ள பார்பெல்லை நெஞ்சுக்கு மேலே தூக்கிப் பிடித்துக்கொண்டு மெதுவாக நெஞ்சைத் தொடும் வரை இறக்கி திரும்பவும் மேலே தூக்கி நிறுத்தவும். எடையை இறக்கும் போது மூச்சை உள்ளே இழுத்துக்கொண்டும், எடையை தூக்கும் போது மூச்சை வெளியிடவும் வேண்டும்.
இப்படி மொத்தம் 15 தடவைகள் (15 ரெப்ஸ்) செய்தால் அது ஒரு செட் ஆகும். பின்னர் சிறிது எடையை அதிகரித்து இப்படியே 12, 10, 8, 6 ரெப்ஸ் என முறையே மொத்தம் 5 செட்கள் செய்ய வேண்டும். இப்பயிற்சியை வாரத்தில் ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களோ செய்ய வேண்டும். மூன்றே மாதங்களில் உங்களின் மார்பு தசைகள் நல்ல திரட்சியாக வளர்ச்சி அடையும். இப்பயிற்சியினால் தோள்கள் மற்றும் ட்ரைசெப்ஸ் தசைகளும் சிறிது பலன் பெறும்

posted from Bloggeroid
No comments:
Post a Comment