Wikipedia

Search results

Showing posts with label இதயம் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள். Show all posts
Showing posts with label இதயம் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள். Show all posts

Saturday, 3 October 2015

இதயம் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்

மனித இதயம் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்!
----------------------------------------------------
மனித உடலிலேயே இதயம் தான் மிகவும் முக்கியமான ஓர் உறுப்பு. சொல்லப்போனால் இது தான் உடலிலேயே மிகுந்த ஆற்றல் கொண்ட கடுமையாக உழைக்கும் உறுப்பு. இதயத்தின் முக்கிய பணி, உடலின் அனைத்து பாகங்களுக்கும் இரத்த நாளங்களின் வழியே இரத்தத்தை அனுப்புவது. உடலிலேயே சற்றும் ஓய்வு எடுக்காமல் எப்போதும் வேலை செய்யும் உறுப்பும் இதுவே.
ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி உலக இதய தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினத்தன்று மக்களிடையே இதய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுகள் நடைபெறும். இன்று உலக இதய தினம் என்பதால், தமிழ் போல்ட் ஸ்கை மனித இதயம் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகளைப் பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
உண்மை #1 ஒரு வளரும் குழந்தையின் இதயத்தின் அளவு ஒரு கைப்பிடி அளவு இருக்கும். அதுவே ஒரு வளர்ந்த மனிதனின் இதயத்தின் அளவானது இரண்டு கைப்பிடி அளவு இருக்கும்.
உண்மை #2 மனித இதயத்தின் எடை 1/2 கிலோவிற்கு குறைவாகத் தான் இருக்கும்.
உண்மை #3 இதய இரத்த குழாய்களின் நீளமானது நமது நாட்டில் உள்ள மொத்த ரயில் பாதையின் நீளத்தை விட மூன்று மடங்கு நீளமானது என்று பாருங்கள்.
உண்மை #4 ஆண்களை விட பெண்கள் மற்றும் குழந்தைகளின் இதயத்துடிப்பு சற்று வேகமாக இருக்கும். அதில் ஆண்களுக்கு ஒரு நிமிடத்திற்கு 70 முறையும், பெண்களுக்கு ஒரு நிமிடத்திற்கு 78 முறையும் துடிக்கும்.
உண்மை #5 இதயம் ஒவ்வொரு முறை சுருங்கும் போதும், உடலில் உள்ள சுமார் பத்தாயிரம் மைல் நீளமுள்ள இரத்தக் குழாய்களில் இரத்தத்தை அனுப்புகிறது.
உண்மை #6 இதயமானது ஒரு நாளில் சுமார் 7200 லிட்டர் இரத்தத்தை உடலின் பல பாகங்களுக்கும் அனுப்புகிறது. ஆனால் உடலிலேயே விழிவெண்படலத்தில் மட்டும் இரத்தம் இல்லை.
உண்மை #7 இதயமானது ஒருவரின் வாழ்நாளில் சுமார் 1 மில்லியன் பேரல் இரத்தத்தை பம்ப் செய்கிறது. (1 மில்லியன் பேரல் இரத்தம் என்பது 3-க்கும் மேற்பட்ட தண்ணீர் டேங்கர்களை நிரப்பும் அளவு)
உண்மை #8 இதயத்தில் இருந்து வரும் ‘லப்-டப்’ என்னும் சப்தம் வருவதற்கு காரணம், இதயத்தில் உள்ள நான்கு வால்வுகள் திறந்து மூடுவது தான்.
உண்மை #9 நம் உடலில் உள்ள நுண்ணிய இரத்தநாளங்களின் நீளம் சுமார் 1 மி.மீ ஆகும்.
உண்மை #10 கருவில் வளரும் குழந்தைக்கு முதலில் வரும் உறுப்பே இதயம் தான்.
உண்மை #11 கருத்தரித்து நான்கு வாரம் கழித்து தான் இதயம் துடிக்க ஆரம்பிக்கும்.
உண்மை #12 ஒருவருக்கு பல் ஈறுகளில் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டால், அவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
உண்மை #13 ஒரு நாளைக்கு இதயமானது 1 லட்சம் வரை சுருங்கி விரிகிறது.
உண்மை #14 இதயத்துடிப்பானது ஒரு நாளைக்கு 1,00,000 தடவையும், ஒரு வருடத்திற்கு 30 மில்லியன் தடவையும், வாழ்நாளில் 2.5 பில்லியன் தடவையும் துடிக்கின்றன.
உண்மை #15 பெரும்பாலான மக்களுக்கு மாரடைப்பானது காலை 8 மணி முதல் 9 மணிக்குள் தான் ஏற்படுகிறது.

posted from Bloggeroid