Wikipedia

Search results

Showing posts with label வேற்றுக் கிரகவாசிகளின் தடயம். Show all posts
Showing posts with label வேற்றுக் கிரகவாசிகளின் தடயம். Show all posts

Sunday, 14 August 2016

வேற்றுகிரக வாசிகளை வேட்டையாடும் முனைபில் நாசா !!

வேற்றுகிரக வாசிகளை வேட்டையாடும் முனைபில் நாசா !!



வேற்றுகிரக வாசிகள் பற்றி ஆயிரம் ஆயிரம் கதைகள் உண்டு. அந்த கதைகள் - உண்மை, பொய், கற்பனை, கட்டுக்கதை, சாட்சி, ஆதாரம், நம்பிக்கை, சந்தேகம் என்று - பல வகைகளில் பிரித்து பார்க்கப்படுகின்றன..! 

அளவில் அடங்காத இவ்வளவு பெரிய அண்டத்தில் பூமி என்ற ஒரு கிரகத்தில் மட்டும் தான் உயிரினங்கள் உள்ளது என்பதை பெரும்பாலோனர்கள் ஏற்றுக்கொள்வதாய் இல்லை. 

முக்கியமாக, ஸ்டீபன் ஹோக்கிங் போன்ற அண்டவியல் அறிஞர்கள் மற்றும் எல்லன் ஸ்டோஃபன் போன்ற நாசா விஞ்ஞானிகள், ஏலியன்கள் இல்லை என்பதை ஏற்றுக்கொள்வதாய் இல்லை..!

ஏலியன் வேட்டை : வேற்றுகிரக வாசிகள் பற்றிய நிஜமான முதல் ஆதாரத்தை கண்டுபிடிக்கும் முனைப்பில், நாசா ஒரு பெரிய ஏலியன் வேட்டையையே நடத்திக் கொண்டிருக்கிறது என்பது மேற்க்கண்ட தகவல்கள் மூலம் உறுதியாகிறது..! 

வரலாற்று பெருமை : ஏனெனில் முதலில் நிலாவிற்கு சென்ற நாடு, முதலில் செவ்வாய்க்கு சென்ற நாடு என்ற வரிசையில், முதலில் ஏலியன்களை கண்டுபிடித்த நாடு என்ற வரலாற்று பெருமையை அடைய ஒவ்வொரு நாடும் முயற்சிப்பதில் தவறு ஒன்றுமில்லை..! 

நாசா முயற்சி : அப்படியாகிய அந்த பந்தயத்தில், சூப்பர் பவர் நாடான அமெரிக்காவின் நாசா (NASA) பெரும் முயற்சிகளை எடுத்து வைக்க இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன..! 

உறுதி : 2025-ஆம் ஆண்டுக்குள் ஏலியன்கள் சார்ந்த அறிகுறிகளை நாசா நிச்சயமாக கண்டறியும் என்று நாசாவின் உயர்நிலை விஞ்ஞானியான எல்லன் ஸ்டோஃபன் உறுதியாக தெரிவித்துள்ளார்..! 

உயிரினங்கள் : நாசா குழு, அண்டத்தில் வாழும் உயிரினங்கள் பற்றி மிகவும் பலமான ஆதாரங்களை திரட்ட இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்..! எங்களுக்கு தெரியும் : மேலும் எங்கே ஏலியன்களை தேட வேண்டும், எப்படி தேட வேண்டும் என்று எங்களுக்கு நன்றாக தெரியும் என்றும் சுட்சமமாக தெரிவித்துள்ளார், எல்லன்..! 

தொழில்நுட்பம் : பெரும்பாலான ஏலியன் சார்ந்த தேடல்களுக்கு எங்களிடம் அதிநவீன தொழில்நுட்பம் உள்ளது மேலும் அதை கொண்டு நாங்கள் தீவிரமான தேடல் பணியில் இறங்க இருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார். 

ஆய்வு : 2020-ஆம் ஆண்டில் விண்ணில் ஏவப்பட உள்ள நாசாவின் அடுத்த மார்ஸ் ரோவர் முழுக்க முழுக்க வேற்றுகிரக வாசிகள் பற்றிய ஆய்வை அண்டவெளியில் நிகழ்த்த உள்ளதாம்..!

Saturday, 13 August 2016

அம்பலமாகியுள்ள ஏரியா 51 இரகசியங்கள் –1

அம்பலமாகியுள்ள ஏரியா 51 இரகசியங்கள் –1

அம்பலமாகியுள்ள  ஏரியா 51 இரகசியங்கள் –1


பறக்கும் தட்டுக்கள் வானில் தென்படுவது தொடர்பிலும், அவற்றினைப் பயன்படுத்தி வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வந்து செல்கின்றார்கள் எனவும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பலதரப்பட்ட கதைகள் பரவி வந்துள்ளதுடன், இது தொடர்பில் பல புகைப்படங்களும் வெளிவந்திருந்தன. இவை தொடர்பிலான ஆதாரங்கள் எதுவும் இன்று வரையிலும் சரிவர நிரூபிக்கப்படாத காரணத்தினால், பறக்கும் தட்டுக்கள் தொடர்பிலான மர்மங்கள் முடிச்சவிழ்க்கப்பட முடியாமல் இன்று வரையில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.


இந்நிலையில், இவ்விடயம் தொடர்பில் ஆர்வம் உடையவர்கள் எவரும் நிச்சயமாக Area 51 பற்றி அறிந்திருக்காமல் இருக்க முடியாது. அந்தளவுக்கு, பறக்கும் தட்டுக்களுடனும் வேற்றுக்கிரகவாசிகளுடனும் நெருங்கிய தொடர்புடைய ஒன்றாக Area 51 காணப்படுகின்றது.

Area 51 மேற்கு அமெரிக்காவின் Nevada பிராந்தியத்திலுள்ள மலைசார்ந்த வறண்ட நிலப்பிரதேசத்தில் அமைந்துள்ளது. Area 51 என்பது அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான ஒரு பயிற்சி பட்டறையும் பரிசோதனை கூடமும் ஆகும். மிக நீண்டகாலமாகவே குறித்த பகுதிக்கு சாதாரண மக்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பிரதேசத்தின் மீதான பொதுவான விமானப்பறப்புக்களும் தடை செய்யப்பட்டுள்ளன. குறித்த பிரதேசம் தொடர்பிலான தகவல்கள் ஆரம்பத்தில் பலருக்கும் தெரியாமல் மிகவும் இரகசியமாகப் பேணப்பட்டு வந்த போதிலும், நாளடைவில் Area 51 தொடர்பிலான விடயங்கள் வெளியுலகத்திற்குக் கசியத் தொடங்கியதையடுத்து அமெரிக்க மக்கள் உள்ளிட்ட உலகத்தில் உள்ள அனைத்து மக்களினதும் கவனமானது Area 51 இன் மீதும், அங்கு என்ன நடக்கின்றது என்பது தொடர்பிலும் திரும்பத்தொடங்கியது.




1955 களில் நிர்மாணிக்கப்பட்டு செயற்படுத்தப்படத் தொடங்கிய குறித்தகட்டமைப்பானது மிகவும் இரகசியமான இராணுவ பரிசோதனைநவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டது என்று ஆரம்பத்தில் கருதப்பட்டபோதிலும், குறித்த பகுதியில் காணப்படுகின்ற Groom Lake எனப்படுகின்றபனிக்கட்டிகள் போன்ற தரைத்தோற்றத்தினைக் (Salt Lake) கொண்ட பாரியநிலப்பரப்பு மற்றும் அதனைச்சுற்றி ஏற்படுத்தப்பட்டிருந்த விமான ஓடுபாதைமேலும் குறித்த பகுதியில் வழமைக்கு மாறான விதத்தில்வடிவமைக்கப்பட்டிருந்த கட்டட அமைப்புகள், சந்தேகத்தினை ஏற்படுத்தும்வகையில் இடம்பெறத் தொடங்கிய பல இராணுவ பரிசோதனைகள் என்பன Area 51மீதான கவனத்தினை வேறு விதமாக திசை மாற்றியிருந்தது.

அத்துடன் Groom Lake என அழைக்கப்பட்ட பகுதியில் நிலத்தின் அடியில் பாரிய புகையிரதப்பாதை ஒன்றுஅமைக்கப்பட்டுள்ளது என்கின்ற தகவல்களும் வெளிவந்திருந்தன.

இதற்கேற்றாற்போல், 1947 ஆம் ஆண்டு ஜுலை 7 ஆம் திகதியளவில்மெக்சிக்கோவின் Roswell எனும் பகுதியில் விபத்துக்குள்ளாகியிருந்த பறக்கும்தட்டு ஒன்றும்,

அதிலிருந்து மீட்கப்பட்ட உயிரிழந்த வேற்றுக்கிரகவாசிகளின்உடலும் Area 51 பகுதியில் வைத்து ஆய்வுக்குட்படுத்தப்படுவதாகத் தகவல்கள்வெளியாகியிருந்தன.

அத்துடன் குறித்த பறக்கும் தட்டானது Area 51  பகுதியில்வைத்து மீள்கட்டமைக்கப்பட்டு வருவதாகவும், அதன் தொழிநுட்பத்தினை அறிந்துகொள்ளும் பொருட்டும் சோதனைகளுக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் மேலதிகதகவல்கள் வெளிவந்திருந்தன.


குறித்த பறக்கும் தட்டின் சிதைவுகள் Area 51 பகுதியில் அமைந்துள்ள Hangar 18என்று அழைக்கப்படும் கட்டடப்பகுதியில் வைத்தே மேற்கொள்ளப்பட்டுவந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும்,  MJ-12  மற்றும் SECTOR 7என்றுஅழைக்கப்படுகின்ற உயர்மட்ட அதிகாரிகள், மற்றும் இராணுவ அதிகாரிகள்உள்ளடங்கிய குழுவொன்று இது தொடர்பிலான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாகநியமிக்கப்பட்டிருந்தது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து Area 51 என்பது வேற்றுக்கிரகவாசிகள் மற்றும் பறக்கும் தட்டுக்கள்தொடர்பிலான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கென அமெரிக்க அரசினால்அமைக்கப்பட்ட அதியுயர் பாதுகாப்பும், இரகசியமும் மிகுந்த பிரதேசம் என பலதரப்பினரும் கருதத்தொடங்கியிருந்தனர். இவையெல்லாவற்றிற்கும் அப்பால்,வானிலைக் கட்டுப்பாடு, இரகசிய ஆயுதங்களின் உற்பத்தி, மற்றும் முன்னையகாலத்தினை நோக்கிப் பயணிப்பதற்கான தொழிநுட்பம் (Time Travel Technology)என்பவை தொடர்பிலான ஆய்வுகளும் Area 51 பகுதியில்மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் பல்வேறு சர்ச்சைகள்தோற்றுவிக்கப்பட்டிருந்தன.

அத்துடன், Area 51 இனைச் சார்ந்த ஏனைய நிலப்பகுதிகளானது பாரிய அணுவாயுதச் சோதனைகளுக்குப் பயன்படுத்தப்பட்டுமிருந்தன. இதன் காரணமாக Area 51 பகுதியில் பணியாற்றிய ஊழியர்கள் பலர் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருந்ததுடன், குறித்த பிரதேசத்தினை அண்மித்த பகுதியில் வாழும் பொதுமக்களுக்கு நாளடைவில் புற்றுநோய்த் தாக்கங்கள் ஏற்பட்டிருந்தன எனவும் பலத்த விமர்சனங்களும் கிளம்பியிருந்தன.

மேலும், Area 51 மற்றும் அதன் இரகசியங்கள் குறித்து The Independence Day போன்ற திரைப்படங்களும் வெளிவந்திருந்தன. அத்துடன், Indiana Jones திரைப்படமொன்றில் அமெரிக்க அரசினால் கைப்பற்றப்பட்டிருந்த விநோதமான பொருட்களைச் சேமித்து வைக்கும் களஞ்சியம் ஒன்று தொடர்பான காட்சி அமைக்கப்பட்டிருந்ததுடன், குறித்த களஞ்சியசாலைக்கு Hangar 51 எனப் பெயரிடப்பட்டுமிருக்கும்.

இவ்வாறான பல சர்ச்சைகளின் முடிச்சுக்களைத் தன்னகத்தே வைத்திருந்த Area 51தொடர்பிலும், அதன் இரகசியத் தன்மை தொடர்பிலும் தற்போது முதல்முறையாக CIA யினர் உத்தியோகபூர்வமான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.இவ்விடயம் தொடர்பிலான தகவல்கள் வொஷிங்டனின் George Washingtonபல்கலைக்கழகத்திலுள்ள தேசிய பாதுகாப்பு ஆவணக்காப்பகத்திலிருந்து தற்போதுவெளியிடப்பட்டுள்ளன. 1998 ஆம் ஆண்டளவில் குறித்த விடயம் தொடர்பில் சிலஆவணங்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்த போதிலும், அவற்றில் பல முக்கியமானவிடயங்கள் மறைக்கப்பட்டே குறித்த ஆவணங்கள் வெளியிடப்பட்டிருந்தன.இந்நிலையில் தற்போது Area 51 குறித்த முழுமையான ஆவணம்வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த ஆவணங்கள் மூலம் தெரியவருவதாவது;

அம்பலமாகியுள்ள ஏரியா 51 இரகசியங்கள் –2

அம்பலமாகியுள்ள ஏரியா 51 இரகசியங்கள் –2

அம்பலமாகியுள்ள  ஏரியா 51 இரகசியங்கள்  – 2

இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். முதல் பாகத்தை படிக்காதவர்கள் <<இங்கே>> சுட்டவும்...

அமெரிக்காவின் இரகசிய உளவு விமானமொன்றின் தயாரிப்பு தொடர்பிலும் அதன் பரிசோதனை தொடர்பிலுமே குறித்த Area 51 பகுதியானது அமெரிக்க அரசினால் 1955 ஆம் ஆண்டில் கையகப்படுத்தப்பட்டிருந்தது. இதன்பின் CIA, விமானப்படை அதிஉயர் தொழில்நுட்பம் கொண்ட வேவுபார்க்கும் விமானம் ஒன்றை உருவாக்க Lockheed என்கின்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து Area 51 பகுதியில் விமான கட்டுமான பணிகளை ஆரம்பித்தது.
U – 2 
U-2 programme என இத்திட்டம் அழைக்கப்பட்டிருந்ததுடன் தனித்துவமிக்க வகையில்உளவு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய U-2 என்கின்ற உளவு விமானத்தினைத்தயாரித்து பரிசோதிப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். குறித்தவிமானமானது பனிப்போர் இடம்பெற்ற காலப்பகுதியில் சோவியத் யூனியன்மீதான கண்காணிப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படத்து.


U-2 உளவு விமானத்தினைப் பொறுத்த வரையில் குறித்த விமானமானது அதிக உயரத்தில் பறக்கக் கூடியதாக இருப்பதுவே அதன் தனித்துவமிக்க சிறப்பம்சமாகும். குறித்த விமானமானது கிட்டத்தட்ட 60,000 அடிகளுக்கும் மேல் பறக்கக் கூடியது என்பதுடன் இவ்விமானத்தின் பறப்புக்களே பறக்கும் தட்டு குறித்த சந்தேகங்களைத் தோற்றுவித்தன என தற்போது தெரிவிக்கப்படுகின்றது.

அதாவது, 1957 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த விமானம் பரிசோதிக்கப்பட்டபோது U-2 விமானத்தின் தொழிநுட்பமானது அக்காலகட்டத்தில் கற்பனையிலும் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு ஒரு பாரிய தொழிநுட்பமாகக் காணப்பட்டது. இதனால் இவ்வாறான தொழிநுட்பத்தினைக் கொண்டமைந்த விடயங்கள் அக்காலகட்டத்தில் உலகத்தில் இருந்திருக்கவே முடியாது என்கின்ற எண்ணம் மக்கள் மத்தியில் காணப்பட்டிருந்தது.

அத்துடன், குறித்த விமானமானது மிகவும் உயரத்தில் பறக்கும் போது அதுசாதாரண கண்களுக்குப் பெரும்பாலும் புலப்படமாட்டாது ஆயினும், குறிப்பிட்டஒரு உயரத்தில் பொதுமக்கள் U-2 வினைக் காணும் போது அது இனங்காணப்படமுடியாத ஒரு பொருள் (Unidentified Flying Object – UFO) பறப்பது போன்றதோற்றத்தினை அக்காலத்தில் ஏற்படுத்தியிருந்தது. மேலும், குறித்த விமானத்தின்பரிசோதனையானது பெரும்பாலும் மாலை நேரத்திலேயேமேற்கொள்ளப்படுவதனால், குறித்த நேரத்தில் விமானத்தின் மீது சூரியனின் ஒளிபட்டுத் தெறிக்கின்ற பிரகாசத்தினை அப்போதைய மக்கள் பறக்கும் தட்டு எனநம்பியிருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு பிற்பட்டகாலப்பகுதிகளில் OXCART, D-21 & F-117 எனும் உளவு விமானங்களும் Area 51 பகுதியில் பரிசோதிக்கப்பட்டமை பறக்கும் தட்டு தொடர்பான சந்தேகங்களுக்குதீனி போடுவதாக அமைந்தது.
OXCART





D 21




F – 117

இவ்வாறு வெளிவந்த வதந்திகளை அமெரிக்க அரசாங்கம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது காரணம் இவ் அதி நவீன உளவு விமானங்கள் சோவியத் உடனான பனிப் போரில் அமெரிக்காவிற்கு தலை சிறந்த ஆயுதமாக விளங்கியது.இப்படி ஓரு ஆயுதம் இருப்பதையே வெளி உலகிற்கு குறிப்பாக சோவியத்திஇற்குகாட்டி கொள்ள விரும்பவில்லை. அகவே பறக்கும் தட்டுக்கள் சம்பந்தமானவதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் அதை ஒரு திசை திருப்பும் கருவியாகபாவித்து Area 51 பகுதியில் உண்மையான இரகசிய நடவடிக்கைகளை தொடர்ந்துமுன்னெடுத்தது CIA. மேலும் பறக்கும் தட்டுக்கள் மற்றும் வேற்றுக்கிரகவாசிகள்தொடர்பிலான சில பொய்யான தகவல்களை அவ்வப்போது திட்டமிட்டுவெளியிட்டு பொதுமக்களை ஒரு குழப்பமான நிலையில்  வைத்திருப்பதற்கானமுயற்சிகளையும் மேற்கொண்டிருந்தது.
இந்நிலையில், இவ்வளவு காலத்தின் பின்னர் இவ்வாறான ஒரு ஆவணத்தினை வெளியிட்டு இதுதான் Area 51இல் நடந்தது என்று சொல்வதன் மூலம் அமெரிக்க அரசாங்கம் எதனை உலகத்திற்கு வெளிப்படுத்த விரும்புகின்றது என்று தெரியவில்லை. அத்துடன் அண்மையில் பறக்கும் தட்டு தொடர்பில் விசாரணை செய்யும் பிரித்தானிய பிரிவு மூடபட்டது CIA இன் பிந்திய அறிகைய உறுதி செய்வதாகவே உள்ளது. ஆக மொத்தத்தில் பறக்கும் தட்டு என்று வதந்தியை உருவாக்கி முழு உலகையும் முட்டாளாக்கி உள்ளது CIA.

Area 51 இன் பல ஆராய்ச்சி நடவடிக்கைகள் பெரும்பாலும் நிலத்திற்கு அடியிலேயே மேற்கொள்ளப்பட்டு வருவதனால், உண்மையில் அங்கு என்ன நடந்தது?, மற்றும் தற்போது என்ன நடந்து கொண்டிருக்கின்றது? என்பது தொடர்பில் உறுதியான தகவல்கள் வெளியுலகத்தினருக்குத் தெரியவாய்ப்பில்லை. அத்துடன், உலகின் ஏனைய நாடுகளைப் பொறுத்தவரையில்  1950 காலப்பகுதிகளில் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாத பரிசோதனைகளை வெற்றிகரமாக அமெரிக்கா முன்னெடுத்திருக்கின்றது என்பது தற்போது உறுதியாக வெளிப்படுத்தப்பட்டிருப்பதால், தற்போதைய காலகட்டத்தில் எம் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்ட எவ்வளவோ விடயங்கள் அமெரிக்காவினால் வெற்றிகரமாகப் கண்டு பிடிக்கப்பட்டு பின் மறைக்கப்பட்டு இருக்கும் என்பதும் மறுக்க முடியாத ஒரு விடயமாகும், காலதத்தின் கைகளிலேயே இதற்கான விடை மறைந்துள்ளது.

டி வில்லியர்ஸ் ஒரு ஏலியன்ஸ்ஸா ஒரு சந்தேகம் ..???

டி வில்லியர்ஸ் ஒரு ஏலியன்ஸ்ஸா ஒரு சந்தேகம் ..???

டி வில்லியர்ஸ் ஒரு ஏலியன்ஸ்ஸா ஒரு சந்தேகம்  ..???

தென்ஆப்ரிக்க அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ் பற்றிதான் இப்போது உலகமெங்கும் பேச்சு..ஏப்பா அவன் மனுசனே இல்லப்பா..அப்டிங்கற வார்த்தைய பரவலா கேட்க முடிகிறது. ஆனா உண்மையிலேயே தென்ஆப்ரிக்க அணியின் கேப்டன் தன்னலமற்ற அற்புதமான கிரிக்கெட் வீரன்தான்...அதற்கான காரணங்களை அடுக்கினால் அசந்து போவீர்கள்...

கிரிக்கெட்டை பொறுத்த வரை பேட்ஸ்மேன்கள் லெக் சைட், அல்லது ஆஃப்சைடுகளில் ஏதாவது ஒன்றில் சிறந்து விளங்குவார்கள்.

சச்சின் போன்ற ஒரு சிலர்தான் இரண்டு பக்கங்களிலும் சிறந்து விளங்குவார்கள். சச்சினிடம் ரிவர்ஸ் ஸ்வீப் ஷார்ட்களை பார்ப்பது அரிது. ஆனால்  டி வில்லியர்ஸ் மைதானத்தின் அனைத்து பகுதிக்கும் பந்தை செலுத்தும் வல்லமை கொண்டவர்.படுத்து, புரண்டு, விழுந்து, உருண்டு எல்லாம் அடிப்பார்.

அந்த வகையில் டி வில்லியர்சுக்கு அவரது ரசிகர்கள் வைத்திருக்கும் செல்லப்பெயர் மிஸ்டர்.360.


விளையாட்டு  உலகை பொறுத்த வரை டி வில்லியர்ஸ் விளையாடாத விளையாட்டே கிடையாது.

தென்ஆப்ரிக்க கால்பந்து அணி, ஹாக்கி அணிகளுக்கு அவரது பெயர் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது.

சிறந்த நீச்சல் வீரரான டி வில்லியர்ஸ் 100 மீட்டர் நீச்சல் பந்தயத்தில் ஜுனியர் பிரிவில் தேசிய அளவில் சாதனை படைத்தவர். ஆறு முறை தென் ஆப்பிரிக்க பள்ளிக்கூட நீச்சல் போட்டியில் சாதனை படைத்திருக்கிறார்.



டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் தென்ஆப்ரிக்க ஜுனியர் அணியில் இடம் பிடித்தவர்.

19 வயதுக்குட்பட்டவர்களுக்கான பேட்மிண்டன் போட்டியில் தென்ஆப்ரிக்க தேசிய சாம்பியன்.

அதேபோல தென் ஆப்பிரிக்க ஜூனியர் தடகளப் போட்டியில் 100 மீட்டர் டேஷ் போட்டியில் சாதனை படைத்துள்ளார். இன்னும் கூட அந்த சாதனை உடைக்கப்படாமல் உள்ளதாம்.

தென்ஆப்ரிக்க ஜுனியர் ரக்பி அணியின் கேப்டனாக இருந்துள்ளார்.
 
விளையாட்டு மட்டுமல்ல படிப்பிலும் டி வில்லியர்ஸ் கெட்டிக்காரர்தான். தேசிய அளவிலான சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புக்காக நெல்சன் மண்டேலாவிடம் விருதும் வாங்கியுள்ளார்..


பாப் இசையில்  அவர் நல்ல பாடகர் கூட...
ஒருநாள் போட்டிகளில் 52.93 சதவீதம் சாராசரி வைத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 98.35 ஆகும். ஒருநாள் போட்டி வரலாற்றில் 50 சதவீதத்திற்கு மேல் சராசரியும் ஸ்டிரைக்ரேட் 95க்கு மேலும் வைத்திருக்கும் ஒரே கிரிக்கெட் வீரர் டி வில்லியர்ஸ்தான்.

ஏற்கனவே விரைவான அரைசதம், சதமடித்து சாதித்துள்ள டி வில்லியர்ஸ் கடந்த ஜனவரி மாதம்தான் மேற்கிந்திய தீவுகள் அணியை புரட்டி புரட்டி எடுத்து 44 பந்துகளில் 149 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஒரு மாதம் கூட ஆகவில்லை மீண்டும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 66 பந்துகளில் 162 ரன்கள் விரட்டி எடுத்துள்ளார்.

இப்படி அதிரடியாக ஆடும் டி வில்லியர்ஸ் 220 பந்துகளில் 33 ரன்களை எடுத்த கதையும் உண்டு. எதற்காக தெரியுமா? தென்ஆப்ரிக்க அணியை தோல்வியில் இருந்து தப்புவிப்பதற்காகத்தான்.ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் நடந்த கதை இது. அந்த வகையில் அணிக்காக ஆடும் மனிதர் டி வில்லியர்ஸ்.
குறைந்த பந்தில் சதமடிப்பதுதான் நம்ம ஏலியன்ஸ்சின் தனி பாணி.அதாவது சதமடிக்கும் போது அவரது ஸ்டிரைக் ரேட் 100க்கு மேல்தான் இருக்கும்.ஒரே ஒரு முறை நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில்தான் 106 பந்தில் 106 ரன்கள் எடுத்துள்ளார். இதுதான் அவரது குறைந்த ஸ்டிரைக் ரேட்...அதாவது 100. இப்போ சொல்லுங்க...டி வில்லியர்ஸ் மனிதரா?அல்லது ஏலியன்சா?

Sunday, 6 September 2015

வேறு கிரகங்களிலிருந்து நம் பூமிக்கு வரும் மனிதர்

வேறு கிரகங்களிலிருந்து நம் பூமிக்கு வரும் மனிதர்களைப் பற்றி பல கதைகளும் ஃபிக்ஸன் மூவிகளும், விஞ்ஞான கட்டுரைகளும் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கிறது. என் சிந்தனையிலும் அப்படி வேற்றுக் கிரகவாசிகள் அடிக்கடி வந்து போவதுண்டு ஆனால் அவர்கள் முற்றிலும் வேறு பட்டவர்கள்.
பொதுவாக வேற்றுக்கிரக வாசிகள் என்றால் பெரிய ஓவல் தலையும் நீல முட்டைக் கண்களும் நீண்டு மெலிந்த கை கால்களும் கொண்டவர்கள். வேறு கிரகங்களிலிருந்து பறக்கும் தட்டு போன்ற வாகனங்களில் வான் வழியே வந்து இறங்குவார்கள் என்று தான் எண்ணுகிறோம். இது முழுக்க ஏதோ ஒரு ஓவியரின் கற்பனை தான்.
வேற்று உயிரினங்கள் மனிதச் சாயலுடன் இருக்க வேண்டிய அவசியமில்லை. மனித சாயல் வருவதற்கு பூமியின் பல பருவமாற்றங்களை மனிதன் தாண்டி பரிணமத்தின் மூலம் பக்குவப்பட வேண்டியிருந்தது. எனவே இது போன்ற சத்தியக்கூறுகள இன்னொரு கிரக உயிருக்கு அமைவது மிக மிக அபூர்வம்.
வேற்று கிரக வாசிகள் பறக்கும் தட்டு போன்ற வாகனத்தில் வந்து இறங்க வேண்டுமென்றால் அவர்களுக்கு மனிதனைப் போன்ற உருவம் இருக்க வேண்டும். வாகனத்தை கட்டுப்படுத்த கைகள், எங்கே இருக்கிறோம் என்று பார்த்து இறங்க கண்கள், இறங்கி நடந்து வர கால்கள் எல்லாம் மனிதனை போல் அமைய வேண்டும். பறக்கும் தட்டு போன்ற வாகனத்தை வடிவமைக்க இயக்க மனிதனைப் போல் இயந்திர அறிவில் பரிணாமம் பெற்றிருக்க வேண்டும். இதற்கான சாத்தியம் வெகுவாக குறைவு. இதை விட வேறு பயண முறைகளை அவர்கள் உப்யோகிக்கலாம். teleportation என்றெல்லாம் நாமே மாற்று வழிகளை யோசித்துக் கொண்டிருக்கிறோம்.
அயல் உயிரினங்கள் எப்படியெல்லாம் இருக்க வாய்ப்புண்டு என எனக்கு தோன்றுவதை சொல்கிறேன்
கெட்டியான பாறை போல் இருக்கலாம், கூழாங்கல் போல இருக்கலாம். அதனால் தான் காலில் கல் தட்டிவிட்டது என்கிறோமா?
பிசு பிசுவென்று போஸ்டர் ஒட்டும் பசை போல் இருக்கலாம். காலில் அப்படி ஏதாவது அப்படி மிதிபட்டால் ஒருமுறை நன்றாக பரிசோதிது பார்த்து விட்டு கழுவவும்.
கலர் கூல் ட்ரிங்ஸ் போல் இருக்கலாம், ஜெல்லியாக இருக்கலாம். குடித்தால் வயிற்றை பிராண்டுவது போலிருந்தால் அதற்கு காரணம் பாக்டீரியா.
இரும்பு நட்டு போல்டு போல இருக்கலாம், மண் போல இருக்கலாம்
தோசை இட்லி போலக்கூட இருக்கலாம்
புதிய தனிமம்,புதிய கிரகம்,என்றெல்லாம் கூட அறியப்படலாம்.
அலைகளாக,கதிர் வீச்சாக கூட இருக்கலாம்
ஒளியாக ஒரு விசிட் அடித்து விட்டு போகலாம்.
வாயு வடிவத்தில் உலவிக்கொண்டிருக்கலாம். நான்கு பேர் கூடுமிடத்தில் திடீரென கெட்ட நாற்றம் வந்தால் அது ஓர் நபரின் வருகையாகக் கூட இருக்கலாம்.
பூமியில் காணப்படும் எல்லா உயிரினங்களும் கார்பன் எனும் கரிமத்தை அடிப்படையாகக் கொண்டது. இது போல மற்ற தனிமங்களை அடிப்படையாகக் கொண்டு கூட உயிரினங்கள் இருக்கலாம். தங்கம் , தாமிரம், கந்தகம், போன்றவற்றை அடிப்படையாக கொண்டு கூட உயிர்கள் இருக்கலாம்
ஒளியாக ,நெருப்பாக, நீராக எல்லாம் கூட உயிரினங்கள் ஆக்கப்பட்டிருக்கும் சாத்தியம் உண்டு. ஒளியால் படைக்கப்பட்ட வானவர்கள் தினமும் பூமிக்கு வந்து செல்கிறார்கள் என்றும் நெருப்பினால் படைக்கப்பட்ட ஜின்கள் இருப்பதாகவும் குர் ஆன் சத்தியம் செய்து கூறுவதை மறுக்க முடியவில்லை. தினம் எவ்வளவு நட்சத்திர ஒளி பூமியை தொடுகிறது. ஆனால் அதன் மனித வடிவமும் மனிதனோடு இன்டெராக்சனும் உறுத்துகிறது.
பழமையான இந்து மதக் கருத்துகளும் உயிர்கள் எல்லா இடமும் இருக்கின்றது என்று தான் சொல்கின்றன.
அடிப்படை ஆதாரமாக நாம் அணுக்களால் தான் ஆக்கப்பட்டிருக்கிறோம் . அணுக்களுக்கு அடிப்படை எலெக்ட்ரான், புரோட்டான் எனும் சக்திகள் தான். எப்படி அணுக்கள் மூலக்கூறுகளாகி, அமினோ அமிலங்களாகி, செல்களாகி, மனிதனாக பரிணாமம் பெற்றானோ. இதே போல் வேறு கிளைகளிலும் ஏன் பரிணாமம் நிகழ்ந்து நம் கண்முன்னே இருந்தும் நம்மால் உணர முடியாத உயிர்கள் நம்மைச் சுற்றி இருக்கக் கூடாது. வீட்டில் இருக்கும் முதியோர்களை ஓர் உயிர்களாக தெரியாதற்கு பெயர் வேறு,அது திமிர்.
முன்பெல்லாம் ஒரு சினிமா பார்க்க வேண்டுமானால் புரொஜெக்டரில் ஃபிலிம் இட்டு ஓட்ட வேண்டும். பின்னர் வீடியோ கேஸட்டுகளில் வேறு வடிவத்தில் சினிமா பதிவு செய்து காட்டப்பட்டது, பின்னர் சிடி க்கள், டிவிடி க்கள் என வேறு டெக்னாலஜியில் அதே "குலேபகாவலி " காட்டப்பட்டது. இப்போது ஹார்ட் டிஸ்க், ஃபளாஷ் மெமெரியில் divx ,mpeg, vob ஃபைலாக கிடக்கிறது. இணையம் வழி இன்னும் எத்தனையோ வடிவங்களில் எல்லாம் அதே சினிமா வெளிப்படுகிறது. இதே போல் உயிர் என்பது வெறும் ஒரு Data தான் ஒரு software போன்றது. அது இருக்கும் மீடியம் எப்படி வேண்டுமானாலும் இருக்கும் சாத்தியம் உண்டு. மின்சாரம் கண்டுபிடிக்கப் படாமல் இருந்தால் இப்போதைய செல் போன், லேப் டாப் , இணையம் எல்லாம் எந்த வடிவில் இருக்கும் ?
வேறு உயிர்கள் வானத்திலிருந்து தான் வர வேண்டுமென்பதில்லை. நாமே இன்னும் அறியாத வகையில் இன்னும் பூமியிலே கூட இருக்கலாம். நம்மைச் சுற்றி பல்லாயிரம் வருடங்கள் இருந்தும் "மரத்துக்கும் உயிருண்டு" என்று நிரூபித்துச் சொல்ல ஒரு ஜகதீச சந்திர போஸ் தேவைப்பட்டது. இன்னும் கல்லுக்கும் மண்ணுக்கும், பூமிக்கும் கூட உயிருண்டு என பின்னாளில் உணரப்படலாம். மண்ணின் அம்சம் தானே நம் உடலிலும். பூமியின் எல்லா உயிர்களும் பூமியின் அம்சம் தானே. உயிரற்றதாக கருதப்படும் பூமியில் உயிர் தோன்றுகிறது. உயிருள்ள உடம்பில் ரோமம். நகம் போன்ற உயிரற்றப் பொருள் தோன்றுகிறது. நாம் உண்ணும் உணவில் உள்ள உயிர் பொருள் நம் உடலில் சேர்வதில்லை. அதிலுள்ள உயிரற்ற பொருள் தான் நம் உடலில் சேர்ந்து உயிர் பொருளாகிறது.
பஞ்ச பூதங்கள், வானவர்கள், தேவர்கள், அசுரர்கள் எல்லாம் இப்படிப் பட்ட வேறு உயிர்களுக்கு மனித வடிவம் கொடுத்து புரிந்து கொண்டிருப்பதாலோ என்னவோ?
வேறு உயிரினங்கள் மனித கண்களால் அளக்கக்கூடிய சைசில் இருக்க வேண்டிய அவசியமில்லை. மலையளவாகவோ, வியாழன் கோள் அளவாகவோ, ஏன் சூரியனின் சைசில் கூட இருக்கக் கூடும். அது போல ஒரு பாக்டீரியா, வைரஸை விட சிறிதாகக் கூட இருக்கலாம். அணுக்களுக்குள் கூட குட்டி பிரபஞ்சங்களும் நட்சத்திரங்களும் கிரகங்களும் உயிர்களும் இருக்கக் கூடும். நம் பார்வையின் அறிவின் எல்லைகள் மிகக் குறுகியது. நம் அறிவின் பவுதீக விதிகள் செல்லுபடியாகாத இடத்திலும் வேறு உயிர்கள் இருக்கலாம். இடம், அளவு , காலம் இதெல்லாம் நம் மனதால் அமைக்கப்படும் ஒரு கருத்து அவ்வளவு தான்.பெரிது சிறிது எல்லாம் நமக்கு மட்டும் தான். நீங்கள் சாப்பிடும் போது பல உலகங்களை உள்ளே தள்ளிக் கொண்டிருக்கலாம். சிலர் மில்கிவே , ஆண்ட்ரமீடா போன்ற கேலக்ஸிகளையே டிபன் பண்ணக்கூடும்.
நம்மை போலவே அத்தகைய வேற்று உயிர்களுக்கும் நம்மை அடையாளம் காண்பதில் சிக்கல் இருக்கலாம். வேறு கிரக உயிர்கள் நம்மை தாக்கி அழிப்பது எல்லாம் சினிமாவுக்கு தான் சரி. அவர்கள் தேவையும் நம் தேவையும் ஒன்று என்றால் தான் அந்த நிலை உண்டாகும். அதற்கு அவர்கள் நம்மைப் போல் இருக்க வேண்டும்.
காலையில் ஒரு எறும்பு வரிசையை பார்த்தேன். சில எறும்புகள் தலையில் ஓர் அரிசியுடன் போய்க் கொண்டிருந்தது. இந்த எறும்பெல்லாம் எங்கே போய் வருகிறதென்று உற்று பார்த்த போது தான் தெரிந்தது கலைஞர் படத்துடன் ஒரு அரிசி ஒரு ரூபாய் போர்டுடன் சிறிய ரேசன் கடை

Saturday, 5 September 2015

சந்திரனில் வேற்றுக் கிரகவாசிகளின் தடயம்: விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தகவல்

நியூயார்க்: சந்திரனில் வேற்றுகிரகவாசிகள் வந்து சென்றதற்கான சில தடயங்கள் கிடைத்திருப்பதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பூமியை தவிர மற்ற கிரகங்களில் மனிதன் அல்லது உயிர்கள் வாழ முடியுமா என்ற ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் பூமியின் துணைக்கோளான சந்திரனில் சில வேற்றுகிரக உயிரிகள் வந்து சென்ற தடயங்கள் கிடைத்திருப்பதாக சில ஆச்சரியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாண பல்கலைக்கழகத்தின் இயக்குனர் டாக்டர் பால் டேவிஸ், பல்கலைக்கழகத்தின் இளங்கலை மாணவர் ராபர்ட் வாக்னர் உள்ளிட்டோர் சந்திரனின் மேற்பரப்பு குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
இந்த ஆராய்ச்சி குறித்து அவர்கள் இருவரும் சேர்ந்து 'சந்திரனில் வேற்றுகிரவாசிகளின் உருவை கண்டறிதல்' என்ற ஆய்வுக் கட்டுரையை தயாரித்தனர். அந்த கட்டுரையை கடந்த ஆண்டு நவம்பர் 23ம் தேதி “ஆக்யா ஆஸ்ட்ரா நாடிகா” என்ற பத்திரிகையில் வெளியிட்டது.
அந்த பத்திரிக்கை செய்தியில் கூறியிருப்பதாவது,
சந்திரனில் எடுக்கப்பட்ட சில படங்களின் மூலம் சில வேற்றுகிரகவாசிகளின் தடயங்கள் கிடைத்துள்ளன. இதன்மூலம் வேற்றுக் கிரகவாசிகள் குறித்த ஆராய்ச்சியில் அவற்றை மிகவும் நெருங்கிவிட்டோம் என்பது தெரிய வருகின்றது. குறுகிய காலத்தில் வேற்று கிரகவாசிகளை கண்டுபிடித்துவிடலாம்.
இதற்காக சந்திரனை பல கோணங்களில் படம் பிடித்து, மேப்பிங் செய்யும் முயற்சியில் விண்வெளியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வேற்று கிரகவாசிகளின் உருவம், அடையாளம் உள்ளிட்ட தன்மைகளை கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.