Wikipedia

Search results

Wednesday, 9 December 2015

Sithargal ulagam8

சாபநிவர்த்தி தேவைப்படாத ஒரு.....
 
Labels: கருவூரார், சித்த மருத்துவம், சித்த ரகசியம், மூலிகைகள்
சித்தர்களை பொறுத்த வரையில் குருநாதர் மட்டுமே தூய்மையானவர், உயர்வானவர், முழுமையானவர். அவரை தவிர்த்த மற்ற எல்லாமே மேம்படுத்த வேண்டியவை என்கிற தீவிரமே அவர்களை தேடலை நோக்கி உந்தியது. தாங்கள் அணுகும் ஒவ்வொரு கூறிலும் உள்ள குறைகளை களைந்து மேம்படுத்திடவே அவர்கள் முனைந்தனர் என்றால் மிகையில்லை. இதனை சாப நிவர்த்தி என அழைத்தனர். சித்தரியலில் இது தனியொரு பிரிவாகவே இருக்கிறது. இந்த சாபநிவர்த்தியின் பட்டியல் சிறிய பொருட்களில் துவங்கி மனிதர்கள் வரை நீளுகிறது.
இரசவாதம் மற்றும் மருத்துவத்தில் மூலிகை சாபநிவர்த்தி என்பது ஒரு பெரும் பிரிவு. தேவையான மூலிகையை பூமியில் இருந்து பறிப்பதற்கு முன்னர் செய்திட வேண்டிய முன் தயாரிப்புகளை சாபநிவர்த்தி எனலாம். காட்டில் மூலிகைகளை தேடும் பொழுது குறிப்பிட்ட மூலிகையினை சுற்றி வளர்ந்து இருக்கும் பிற செடிகளை கவனிக்க வேண்டுமாம். பிற செடிகளின் தன்மை மற்றும் பண்புகளை கருத்தில் கொண்டே தேவையான மூலிகையினை பறிக்க வேண்டும் என கூறியிருக்கின்றனர். இவை இரண்டு வகைப்படும், மருத்துவ தேவைகளுக்கு சாப நிவர்த்தி செய்வது, குறிப்பிட்ட மூலிகையை ஒரு குறித்த செயலை செய்யவதற்கு தயார் செய்யும் சாப நிவர்த்தி முறை ஆகும். சாப நிவர்த்தி செய்யாது பயன்படுத்தினால் அவை பலனளிக்காது என வலியுறுத்திக் கூறுகின்றனர்.
எதிலும் விதிவிலக்கு இருக்கும்தானே, ஆம்!, ஒரே ஒரு மூலிகை மட்டும் சாபநிவர்த்தி செய்யாமல் பயன்படுத்தலாமாம். அதைப் பற்றியதே இன்றைய பதிவு.
அது என்ன மூலிகை?
 
இந்த மூலிகை பற்றிய விவரம் கருவூரார் அருளிய "கருவூரார் பலதிரட்டு" என்னும் நூலில் விவரிக்கப்பட்டிருக்கிறது. அந்த பாடல் பின்வருமாறு..
சத்தியமாய்ச் சொல்லுகிறேன் நத்தைச்சூரி
தாரணிக்குள் சாபமில்லை பெரியோர் கொள்வார்
சித்தியென்ற எட்டுமிதற் குள்ளேயாச்சு
செகமெல்லாம் இதன் பெருமை திறமோ காணார்
சுத்தியென்ற சூரிதனைத் தினமுங் கொண்டால்
சொல்லவொண்ணா ஆச்சரியம் இறுகுந்தேகம்
சுத்தியென்ற அருக்கனிலே காப்புகட்டிச்
சொல்லடா மந்திரத்தைச் சூட்டுறேனே.
 
சூட்டுகிறேன் ஓம்வச்சிர ரூபிசூரி
சூரி மகாவீரி சுவாகா வென்று
நாட்டுகிறேன் சமூலமே பிடுங்கிவந்து
நன்றாகச் சூரணம்செய் சீனிநேரே
ஊட்டுகிறேன் கலந்துமண் டலந்தாந்தின்னு
ஒரு நூறு இருபதுமோ வொருநாளும்
மாட்டுகிறேன் பத்திரத்தை வாயிலிட்டு
மைந்தனே மலைகளெல்லாம் நோருக்கலாமே.
 
நொறுக்கலாம் விரையெடுத்துத் தினமும் கொண்டால்
நூறூழி அளவுவரை இருக்கலாகும்
நோருக்கலாம் எந்தெந்தத் தொழில்கள்தானும்
நோக்காதே மற்றுமொரு கற்பமேனும்
நொறுக்கலாஞ் சத்துருவும் வியாதிதானும்
நுணுக்கமே உலகத்தோர் காணாரப்பா
நொறுக்கலாம் இம்மூலி சிரசில் வைக்க
நோக்காதே தேவதைகள் போற்றும்பாரே.
 
உலகத்தில் மூலிகை எல்லாவற்றிற்கும் சாபம் உண்டு ஆனால் "நத்தைச் சூரி" என்கிற மூலிகைக்கு மட்டும் சாபம் இல்லை. அதனை அறிந்தவர்கள் இந்த மூலிகையை அப்படியே பயன்படுத்துவார்கள் என்கிறார் மேலும் உலகத்தில் இதன் பெருமை அதிகம் என்றும் சொல்கிறார்.
நத்தைச் சூரியைத் தினமும் உட்கொண்டால் உடல் இறுகுமாம். ஞாயிற்றுக்கிழமையில் நத்தைச் சூரியை பிடுங்க வேண்டுமாம் அப்படி பிடுங்கும் போது "ஓம் வச்சிர ரூபி சூரி சூரி மகாவீரி சுவாகா" என்று மந்திரத்தைச் செபித்துச் பிடுங்கி வந்து உலர்த்தி நன்றாகச் சூரணம் செய்து அதற்கு சமன் அளவாக சீனி சேர்த்து ஒரு மண்டலம் உண்டால் அதிக வலிமை உண்டாகும் என்கிறார்.நத்தைச் சூரி இலையை வாயில் மென்று அதக்கிக் கொண்டால் மலையை நொறுக்கும் வலிமை உண்டாகுமாம்.
நத்தைச் சூரி விதையை எடுத்துத் தினமும் சாப்பிட்டு வர நீண்ட நெடுங்காலம் வாழலாம் என்கிறார். அத்துடன் அனைத்துச் சித்துக்களும் உண்டாகுமாம். வேறு எந்த கற்ப மருந்துகள் தேவைப்படாது,வியாதிகளும், எதிரிகளும் நெருங்காது வாழலாம் என்கிறார்.இவ்வாறான நுணுக்கமான தகவல்களை உலக மக்கள் அறிய மாட்டார்கள். என்று சொல்லும் இவர், நத்தைச் சூரியைத் தலையில் வைத்துக் கொள்ள தேவதைகளும் போற்றுவார்கள் என்கிறார்.
ஆச்சர்யமான தகவல்கள்தானே!
 
சித்தரகசியம் - நிறைவுப் பகுதி!
 
Labels: சித்த ரகசியம்
கடந்த பதினைந்து பதிவுகளாய் தொடர்ந்த சித்தரகசியம் தொடரின் நிறைவுப் பதிவுவாக இதை வைக்கிறேன். காலத்தே பொதுவில் பகிராமல் மறைக்கப் பட்ட அனைத்துமே ரகசியம்தான். அந்த வகையில் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் வரையில் ஒரு சிறிய வட்டத்தில் மட்டுமே அறியப் பட்டிருந்த இந்த தகவல்களின் அடிப்படைகளை பொதுவில் பகிர்ந்து கொள்வதே எனது நோக்கம்.
 
இயன்ற வரையில் எனது பதிவுகளை வியப்பு சார்ந்த ஒன்றாய் அமைத்திடாது, அறிதலும் அதனை புரிதலும் பின் தெளிதலுமான ஒரு எழுத்தோட்டத்தில் அமைத்திடவே முயன்று வருகிறேன். இனி சித்தரகசியம் பதிவுகள் தொடர்பாய் சில விளக்கங்களை மட்டும் வைத்து இந்த தொடரை நிறைவு செய்கிறேன்.
 
இந்த தொடரில் தரப் பட்டிருக்கும் தகவல்கள் அனைத்தும் பின்வரும் நூல்களில் இருந்தே திரட்டப் பட்டவை..
 
அகத்தியர் அருளிய..
 
அகத்தியர் மாந்திரீக காவியம், அகத்தியர் பன்னிரு காண்டம்
 
புலிப்பாணி சித்தர் அருளிய..
 
புலிப்பாணி சக்கர விஞ்ஞை
 
உடல் சாப நிவர்த்தி மந்திரத்தைப் பதிவிடுமாறு பலரும் கேட்டிருந்தனர்.
 
உடல்சாப மந்திரத்தை பொறுத்தவரையில் தகுதியான குரு ஒருவர், தனது தகுதியான சீடனுக்கு அருள வேண்டியது. என் வரையில் நான் இன்னமும் இந்த தேடலின் ஆரம்பநிலையில் உள்ளவள். இந்த நிலையில் என்னால் மற்றவர்களுக்கு இதை அருளும் தகுதியோ, பக்குவமோ இல்லை என்பதாலும், மந்திரத்தின் புனிதத் தன்மையை கருத்தில் கொண்டுமே பொதுவில் வைத்திட வில்லை. ஆர்வமுள்ளோர் மேலே சொன்ன நூல்களில் தேடிடலாம்.
 
தீட்சை மந்திரங்களைப் பொறுத்தவரையில் முறையான உடல் மற்றும் மன பக்குவம் இருந்தால் மட்டுமே முயற்சிக்க வேண்டும் என சித்தர் பெருமக்கள் கூறியிருக்கின்றனர். சிவதீட்சை என்பது ஒவ்வொரு படிநிலையாக கடக்க வேண்டியது. முயற்சியும், பயிற்சியும் உள்ளவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம். இதனையே நம் முன்னோர்கள் “மந்திரம் கால், மதி முக்கால்” என்ற பழம் வாக்கின் மூலம் உணர்த்தியிருக்கின்ற்னர் என கருதுகிறேன்.
 
மூலிகை சாபநிவர்த்தியின் பின்னால் இருக்கும் சூட்சுமத்தினை பரந்த பட்ட கருத்தியலாக கொள்ளலாம். இது பற்றி தனியே விரிவாக பிரிதொரு சாந்தர்ப்பத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.
 
இத்துடன் சித்தரகசியம் தொடர் முற்றிற்று. அடுத்த பதிவில் புதிய முயற்சி ஒன்றினைப் பகிர்ந்து கொள்கிறேன்.
 
சித்தரகசியம் - விபரீத யந்திரங்கள் தொடர்ச்சி..
 
Labels: சித்த ரகசியம்
இன்றைய பதிவில் விபரீதங்களை விளைவிக்கும் சில சக்கரங்களைப் பற்றி பார்ப்போம்.முதலில் அகத்தியர் அருளிய விருட்ச மாரண சக்கரம்.இது எத்தகைய மரத்தையும் மாரணம் செய்விக்குமாம்.இதனை அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார்.
 
"பாரேதான் புலத்தியனே பண்புளானே
பாலகனே ஓரறிவுக் குற்றசாதி
நேரேதான் விருட்சங்க ளெதுவானாலும் 
நேர்மையுடன் மார்க்கத்தை விளம்பக்கேண்மா"
 
- அகத்தியர் -
 
"விதியான விருட்சமாரண சக்கரந்தான்
பதியான வைந்துவரை குறுக்கே கீறி
பாவலனே யைந்துவரை நெடுக்கேகீறி
மதியோடு மாளியது பதினாறாச்சு
மானிலத்தில் நாதாக்கள் மறைத்தசேதி"
 
- அகத்தியர் -
 
விருட்சங்களுக்கு விதியாய் அமையும் இந்த விருட்சமாரணச் சக்கரத்தை பூமியில் சித்தர்கள் மறைத்தார்கள். நான் உனக்கு சொல்கிறேன் கேள் என துவங்குகிறார்.... குறுக்காக ஐந்து கோடும் நெடுக்காக ஐந்து கோடும் கீற பதினாறு அறைகள் உருவாகும். அந்தக் கோடுகளின் நுனியில் சூலம் கீறி அந்த அறைகளுக்குள் இடவேண்டிய எழுத்துக்களையும் தனது பாடலில் குறிப்பிடுகிறார். இவ்வாறு தயாரித்த சக்கரத்தினை...
 
"தீர்க்கமுடன் விருட்சத்தின் அடிப்பாகத்தில் 
அப்பனே சாண்நிகளஞ் சதுரந்தோண்டி
கேளப்பா சக்கரத்தை அதன் கீழ்ப்போட்டு
மணலாலே மூடே மூன்றேநா ள்தனிலே
நலமான விருட்சமது பட்டுப்போகும்
நாசமாம் விருட்சமது நாசமாகும்
நாயகனே பச்சைமரம் பட்டுப் போகும்
வீணருக்கு உரைத்திடாதே கேடுவிழையும்"
 
- அகத்தியர் -
 
குறிப்பிட்ட விருட்சத்தின் அடிப் பக்கத்துக்கு அண்மையில் ஒரு குறிப்பிட்ட அளவு ஆழத்துக்கு சதுரமாக ஒரு குழி தோண்டி அதில் இந்தச் சக்கரத்தைப் போட்டு மண்ணால் மூடிவிட்டால் மூன்று நாளில் அந்த பச்சை மரம் பட்டுப்போய் நாசமாகிவிடுமாம். வீணருக்கு இதை உரைத்தால் கேடு விளையும் என்கிறார். அதுவும் உண்மை தானே?
 
சத்துரு மாரணச் சக்கரம்
 
குறுக்காக ஆறு கோடும் நெடுக்காக ஆறு கோடும் வரைந்தால் இருபத்தியைந்து அறைகள் உருவாகும். ஒவ்வொரு அறையின் பக்கவாட்டுப்பகுதி முனைகளிலும் சூலம் கீறிய பின்னர், குறிப்பட்ட சில எழுத்துக்களை அந்த அறைகளுக்குள் எழுதிட வேண்டுமாம், இந்த சக்கரத்தை ஒரு ஆலமரத்தின் கிழக்குப் பக்கமாகச் செல்லும் கிளையில் முக்கிய சத்துரு பெயரைச் சொல்லி கட்டிவிட்டு மூன்றுநாட்கள் சென்று அதை கழட்டினால் அந்த சத்துரு இறந்து விடுவான் என்கிறார். ஏன் இந்த சக்கரஙக்ளை அகத்தியர் மறைத்து அருளினார் என்பதன் சூட்சுமம் இப்போது புரிகிறதா?
 
விலங்கு மாரணச் சக்கரம்
 
அத்திமரத்து பலகை எடுத்து அதில் குறுக்காக ஐந்து கோடும் நெடுக்காக ஐந்து கோடும் கீறினால் பதினாறு அறைகள் உருவாகும்.அந்தக் கோடுகளின் நுனியில் சூலம் கீறிய பின்னர், அந்த அறைகளுக்குள் குறிப்பட்ட சில எழுத்துக்களை எழுதிட வேண்டும்.அந்தப் பலகையை எருக்கம் விறகிட்டு எரித்து அந்த சாம்பலை ஆற்று நீரில் கரைக்க வேண்டும், அப்படி ஆற்று நீரில் கரைக்கும் போது மனதில் நினைக்கும் காட்டு விலங்கானது அந்த நொடியே மாண்டுவிடும் என்கிறார். நகருக்குள் பிரவேசித்து மக்களைத் துன்புறுத்தும் விலங்குகளை இந்த சக்கரம் அழிக்க உனக்கு உதவும் என்றும் கூறுகிறார்.
 
காட்டேரிச் சக்கரம்
 
குறுக்காக ஆறு கோடும் நெடுக்காக ஆறு கோடும் வரைந்தால் இருபத்தியைந்து அறைகள் உருவாகும்.ஒவ்வொரு அறையின் பக்கவாட்டுப்பகுதி முனைகளிலும் சூலம் கீறிய பின்னர், குறிப்பட்ட சில எழுத்துக்களை அந்த அறைகளுக்குள் எழுதி பின் அந்த சக்கரத்தை குறிப்பிட்ட பீஜ மந்திரத்தால் ஆயிரத்தி எட்டு தடவைகள் செபித்து அந்த யந்திரத்தை தாயத்தில் போட்டு ஒரு குறிப்பிட்ட நாளில் அணிந்து கொண்டால் காட்டேரி அடிமையாகி ஏவல் புரியும் என்கிறார் அகத்தியர்.
 
இவ்வாறு விபரீத யந்திரங்களின் பட்டியல் நீள்கிறது. பதிவின் நீளம் கருதி இத்துடன் இந்த தொடரை நிறைவு செய்கிறேன். நாளைய பதிவில் சித்த ரகசியம் தொடர் குறித்து தொடர்ந்து வரும் வேண்டுகோள்களுக்கான விளக்கங்களை பகிர்ந்து கொள்கிறேன்.
 
சித்தரகசியம் - விபரீத யந்திரங்கள் ஓர் அறிமுகம்!
 
Labels: சித்த ரகசியம்
சித்தர்களின் யந்திரங்களைப் பற்றி முந்தைய பதிவு ஒன்றில் பகிர்ந்திருக்கிறேன்.தயை கூர்ந்து இந்த இனைப்பில் சென்று யந்திரங்களைப் பற்றிய அறிமுகத்தினை வாசித்துவிட்டு இந்த பதிவினை தொடர்ந்தால் புரிதலுக்கு ஏதுவாயிருக்கும். பொதுவில் யந்திரங்கள் மூன்று விதமான வேலைகளுக்காக கீறப்படுகிறது.
 
தெய்வங்களை யந்திரவடிவில் கீறி அதனை சக்தியேற்றி உருத்தந்து, அந்த தெய்வத்தின் அருளினையும், ஆசியினையும் வணங்கிப் பெறுவது.இவ்வகை யந்திரங்களே கோவில்களில் இறைவனின் சிலைகளுக்கு கீழ் பிரதிஷ்ட்டை செய்யப் படுகிறது.இந்த யந்திரங்கள் குறிப்பிட்ட காலம் வரையில் மட்டுமே தொழிற்பாடு கொண்டவை.
 
சோதிட இயலில் கோள்களினால் உண்டாகும் பாதிப்புகளில் இருந்து மீள்வத்ற்கும், பில்லி, சூனியம் போன்ற தீய சக்திகளில் இருந்து தன்னையும், தன் சுற்றத்த்தையும் காத்துக் கொள்ளும் பொருட்டு உருவாக்கப் படும் ய்நதிரங்கள். இவை பெரும்பாலும் பரிகார யந்திரங்களாகவே அறியப் படுபவை.
 
மூன்றாவது வகையான யந்திரங்கள்தான் மிகவும் ஆபத்தானவை,இவ்வகை யந்திரங்கள் எந்த வகையான பூசையோ அல்லது உருவேற்றலோ இலலமலே இயங்கக் கூடியவை.இந்த வகை யந்திரங்கள் கீறத்துவங்கும் போதே செயலாற்ற துவங்கி விடுமாம். இந்த யந்திரங்களை சித்தர்கள்வாகார சக்கரங்கள் என்றும், சிரக சக்கரங்கள் என்றும் குறிப்பிடுகின்றனர்.
 
மிகவும் ஆபத்தான இந்த சக்கரங்கள் எக்காரணம் கொண்டும் வெளியில் தெரியக் கூடாது என்பதில் சித்தர்கள் மிகவும் உறுதியாக இருந்தனர். எனவே இந்த சக்கரஙக்ள் குறித்த தகவல்கள் மிகவும் கடுமையான மறைமொழிகளால் பகரப் பட்டிருக்கிறது. மிகவும் நம்பிக்கையான சீடர்களுக்கு மட்டுமே இவ்வகையான யந்திரவிளக்கங்கள் குருவினால் அளிக்கப் பட்டிருக்கிறது.
 
அகத்தியர், புலிப்பாணி சித்தர் பாடல்களில் காணப்படும் சில சக்கர விளக்கங்களை நாளைய பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.
 
சித்தரகசியம் - மூலிகை சாபநிவர்த்தி!
 
Labels: சித்த ரகசியம்
மூலிகை சாபநிவர்த்தி என்பதை மூலிகையினை நிலத்தில் இருந்து பறிக்கும் பொழுதில் செய்திட வேண்டிய முன் தயாரிப்பாக கருதலாம்.காட்டில் மூலிகைகளை தேடும் பொழுது குறிப்பிட்ட மூலிகையினை சுற்றி வளர்ந்து இருக்கும் பிற செடிகளை கவனிக்க வேண்டுமாம்.பிற் செடிகளின் தன்மை மற்றும் பண்புகளை கருத்தில் கொண்டே தேவையான மூலிகையினை பறிக்க வேண்டும் என்கின்றன்ர்.உடல் சாபநிவர்த்தி பெற்றவர்களுக்கு இத்தகைய பகுத்தறியும் திறமை வாய்க்கும் என்கிறார் அகத்தியர்.
 
மூலிகை பறிப்பதற்கு முதல் நாளே குறிப்பிட்ட மூலிகையினை சுற்றியுள்ள மற்ற செடிகளை நீக்கிவிட வேண்டுமாம்.பிறகு குறிப்பிட்ட நேரத்தில் அதற்கென உள்ள பூசை முறைகளோடு தனித்துவமான ம்ந்திரத்தை செபித்து விரல் நகம் படாமல் அந்த செடியினை வேரோடு பறித்திடல் வேண்டும் என்கின்றனர்.சாபநிவர்த்தியின் அடிப்படையே குறிப்பிட்ட மூலிகையின் உயிர்த் தன்மையினை தக்க வைப்பதாகும்.
 
சாப நிவர்த்தி மந்திரங்களுக்கு பொருள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை.பெரும்பாலான மந்திரங்களை லட்சம் தடவை செபித்து உருவேற்றிட வேண்டும் என குறிப்புகள் கூறுகிறது.இதன் பின்னால் இருக்கும் சூட்சுமம் இன்னமும் அறியப் படவில்லை.
 
நண்பரொருவர் செடிகளில் இருக்கும்,பூச்சிகள்,கிருமிகள் போன்றவற்றை அகற்றிட இம்மந்திரங்கள் உபயோகமாகலாம் என கூறியிருந்தார், இது குறித்து அறிந்தவர்கள் மேலதிக விவரம் கூறினால் அனைவருக்கும் பயனுடையதாக இருக்கும்.
 
இனி சில மூலிகை சாப நிவர்த்தி மந்திரங்களைப் பார்ப்போம்.
 
"ஆமென்ற வசியமென்று சொல்லக் கேளு
ஆஅதி முதலான கொடியறுகு வாங்க
டங் றீங் வங் யென்று லட்சம் செபித்தால்" 
 
- அகத்தியர் -
 
கொடியறுகு வேரை வசிய முறைகளுக்கு பயன்படுத்தும் போது "டங் றீங் வங்" என்று லட்சம் உரு செபித்து சாப நிவர்த்தி செய்து பறிக்க வேண்டும் என்கிறார் அகத்தியர்.
 
"நாடவே பெருவாகை மூலிசாபம்
கெவனமுடன் ஓம் நமசிவய வென்று
தாளப்பா லட்சமுரு ஓதும் போது 
மீளப்பா வசிய யோகம் தரணியில்"
 
- அகத்தியர் -
 
பெருவாகை மூலிகையை வசிய முறைகளுக்கு பயன்படுத்தும் போது "ஓம் நமசிவய" என்று லட்சம் உரு செபித்து சாப நிவர்த்தி செய்து பறிக்க வேண்டும் என்கிறார் அகத்தியர்.
 
இரசவாதத்தில் பயன்படுத்தப் படும் சாபநிவர்த்தி மந்திரங்கள்
 
"பத்தியுடன் பாசாண சுண்ண செந்தூரம்
பாங்காகப் புடமிடும்முன் சாபங்கேளே
கேளப்பா பாசாண சாபந்தீரக்
கிருபையுடன் ஓம் ஹீம் நசிமசி யென்று
வாளப்பா ஆயிரத்தெட் டுருச்செபிக்க
வலியான பாசாண சாபந்தீரும்"
 
- அகத்தியர் -
 
பாசாண சுண்ண செந்தூரங்களை புடமிடும் முன் சாபத்தை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்று சொலும் அகதியர்.. மேலும் கிருபையுடன் "ஓம் ஹீம் நசிமசி" என்று ஆயிரத்தி எட்டு உரு செபித்தால் வலிமை உள்ள பாசாணங்களின் சாபங்கள் தீரும் என்கிறார்.
 
"போமேதான் உபரசத்தின் சத்தைச்சேர்த்து 
புகழான ரசவாதஞ் செய்யும் போது 
ஆமேதான் ஓம் றீம் நசிமசி யென்று
அன்பாக ஆயிரத்தெட் டுருச்செபித்தால்
வாமேதான் உபரசத்தின் சாபம் போச்சு"
 
- அகத்தியர் -
 
உபரசத்தின் சத்துக்களைச் சேர்த்து புகழ்நிறைந்த் இரசவாதம் செய்யும் போது அன்பாக "ஓம் றீம் நசிமசி" என்று ஆயிரத்தி எட்டு உரு செபித்தால் உபரசத்தின் சாபங்கள் நீங்கும் என்கிறார் அகதியர்.
 
இது வரை இந்த சித்த ரகசியம் தொடரில் சொன்ன மந்திரங்கள் வரிசையாக, உடல் சாப மந்திரங்கள், உடல் கட்டு மந்திரங்கள், தீட்சை மந்திரங்கள் என்ற படிமுறையிலேயே மேற்கொள்ள வேண்டும் என்று அகத்தியர் வலியுறுத்துகிறார்.
 
இத்துடன் சாப நிவர்த்தி ம்ந்திரங்கள் பற்றிய அறிமுகத்தை நிறைவு செய்கிறேன்.குருவருள் சித்திக்குமாயின் அடுத்த ஆண்டில் சாபநிவர்த்தி தொடர்பாக ஆய்வு நூல் ஒன்றினை எழுதிடும் எண்ணத்தில் இருக்கிறேன்.
 
நாளைய பதிவில் சித்தரகசிய தொடரின் எஞ்சியிருக்கும் தலைப்பான ”அபாயகரமான யந்திரங்கள் “ பற்றி பார்ப்போம்.
 
சித்தரகசியம் - சாபநிவர்த்தியின் வகைகள
 
Labels: சித்த ரகசியம்
எனது புரிதலின் படி சித்தரியலில் சாபநிவர்த்தி என்பது மூன்று பெரும் பிரிவுகளில் அடங்குகிறது.
 
சாதகன் தன்னையே சாபநிவர்த்தி செய்து கொள்வது,
 
மருந்து,மாந்திரீகம் செய்வதற்கு தேவையான மூலிகைகளை சாப நிவர்த்தி செய்வது,
 
இரசவாதம் மற்றும் மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப் படும் தின்மங்களை சாப நிவர்த்தி செய்வது என வகைப் படுத்தலாம்.
 
உடல் சாப நிவர்த்தி
 
சித்தரியலில் தேடல் உள்ள ஒவ்வொருவரும் முதலில் செய்து கொள்ள வேண்டிய ஒன்றாக இது கருதப் படுகிறது. அதாவது சாதகர்கள் தங்கள் உடலை தூய்மைப்படுத்திக் கொள்வதாக இதனை கூறுகின்றனர்.
 
குருவின் அனுமதியோடு,குருவானவர் உபதேசிக்கும் குறிப்பிட்ட ஒரு மந்திரத்தை ஒரு லட்சம் முறை செபித்து மந்திர சித்தி அடைவதே உடல் சாபநிவர்த்தி எனப்படுகிறது.இந்த மந்திரத்தை பொதுவில் வைத்திட எனக்கு அனுமதி இல்லை என்பதால் அதனை இங்கே தவிர்க்கிறேன்.
 
மூலிகைகளை சாப நிவர்த்தி
 
இதனை இரண்டு வகையாக கூறுகின்றனர்.
 
மருத்துவ தேவைகளுக்கு சாப நிவர்த்தி செய்வது, இதில் எல்லா மூலிகைகளுக்கும் பொதுவான சாப நிவர்த்தி முறை கடைபிடிக்கப் படுகிறது.இதற்கென பிரத்யேக மந்திரங்கள் இருக்கிறது.
 
மற்றொரு வகையில், குறிப்பிட்ட மூலிகையை ஒரு குறித்த செயலை செய்யவதற்கு தயார் செய்யும் சாப நிவர்த்தி முறை ஆகும். இதில் ஒவ்வொரு மூலிகைகளுக்கும், ஒவ்வொரு காரியத்திற்கென தனித் தனி சாப நிவர்த்தி முறைகள் கடைப்பிடிக்கப் படுகிறது.மாந்திரீகத்தில் இத்தகைய சாபநிவர்த்திகள் புழக்கத்தில் இருக்கிறது.
 
திண்ம மற்றும் கனிம பொருள்களின் சாப நிவர்த்தி
 
இது இரசவாதம், மருந்து தயாரிப்பு மற்றும் இயந்திர தயாரிப்புகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் திண்ம, திரவ, உலோக பொருட்களை தூய்மைப் படுத்தும் வகையில் அமைகிறது. 
 
நாளைய பதிவில் மூலிகை சாப நிவர்த்தி மற்றும் இரசவாதத்தில் பயனாகும் சாபநிவர்த்தி முறைகளைப் பற்றி பார்ப்போம்.
 
சித்தரகசியம் - சாபநிவர்த்தி ஓர் அறிமுகம
 
Labels: சித்த ரகசியம்
சித்த ரகசியம் தொடரில் இனி வரும் பதிவுகளில் சாபநிவர்த்தி பற்றி பார்ப்போம். இது பற்றி ஏற்கனவே முந்தைய சில பதிவுகளில் விளக்கியிருக்கிறேன்.
 
சித்தரியலில் சாப நிவர்த்தி என்பதை குறைகளை களைதல் அல்லது தேவைகளுக்கேற்ப முன் தயாரிப்பு என்று அர்த்தப் படுத்தலாம். சித்தர்கள் பார்வையில் குருநாதரைத் தவிர குறையற்றவை என்று எதுவும் இல்லை.எல்லாம் ஏதோ ஒரு வகையில் குறையுடன் இருப்பதாகவே கருதினர். அவற்றை மேம்படுத்தி பயன் படுத்துவதையே சாப நிவர்த்தி என்கிற தனிப் பிரிவாக வகுத்திருந்தனர்.
 
அகத்தியர் தனது அகதியர் பன்னிரு காண்டம் மற்றும் அகதியர் மாந்திரீக காவியம் ஆகிய நூல்களில் சாப நிவர்த்தி பற்றி விரிவாக கூறியிருக்கிறார். சாப நிவர்த்தி செய்யப் படாத உடலோ, மூலிகையோ, தின்மமோ பயன்பாட்டிற்கு உகந்தவை அல்ல என்கிறார்.
 
செய்யவே விட்டகுறை இருக்கும்போது
தீர்க்கமுடன் உடல்சாபம் நிவர்த்தி செய்தால்
ஐயமுள்ள மூலிகைகள் கண்ணிற்காணும்
அப்போது ரசவாதம் பலிதமாகும்
பொய்யல்ல உடற்சாபந் தீராமற்றான்
போய்த்தேடித் திரிந்தாலுங் கண்ணிற்காணா
மெய்யாகக் கண்டிட்டோ மென்று சொல்வார்
வீணிலவர் பேச்சைநம்பி அலைந்திடாதே.
 
- அகத்தியர் -
 
மனிதர்கள் தங்கள் உடல் சாபத்தை நிவர்த்தி செய்து கொள்வதால் வெற்றிகளைத் தரக்கூடிய அரிய மூலிகைகள் எல்லாம் கண்ணில் தெரியும் என்கிறார்.இதனால் இரசவாதம் பலில்லும், உடல்சாபத்தை நிவர்த்திக்காது எது செய்தாலும் அது கைகூடாது என்கிறார். மேலும்...
 
பாரப்பா சாபமது தீர்க்க வேணும்
பரிவான மூலிகையின் சாபம் தீரும்
காரப்பா சுண்ணசெந் தூரபற்பம்
கற்பமுறை செய்யவென்றால் சாபந்தீரும்
நேரப்பா வாதவித்தை வைத்தியங்கள்
நேர்மையுடன் செய்யவென்றால் சாபந்தீரும்
சீரப்பா கற்பகங்கள் தைலம் ஜாலம்
தீட்சைகளுஞ் செய்யவென்றால் சாபந்தீரே.
 
- அகத்தியர் -
 
பரிவான மூலிகைகளின் சாபத்தை தீர்க்கவேண்டும், சுண்ணம், செந்தூரம், பற்பம் செய்ய வேண்டும் என்றால் அவற்றின் சாபத்தை நீக்கவேண்டும், இரசவாத வித்தைகள், வைத்தியங்கள் சரியாகச் செய்யவேண்டும் என்றால் அதற்கும் சாபத்தை தீர்க்கவேண்டும், மேலும் தைலங்கள், கற்பங்கள் செய்யவேண்டும் என்றாலும் சாபம் தீர்க்க வேண்டும் என்கிறார்.
 
"தீரேநீ ஜாலமுடன் மாந்திரீகம்
செய்வதற்கு சித்தமுனிசாபந் தீரவேணும்
நேரேநீ யோகஞா னங்கள்செய்ய
நேர்மையுடன் சாபமது தீர்க்க வேணும்
கண்மணியே சாபமதை நிவர்த்திசெய்யே"
 
- அகத்தியர் -
 
ஜாலங்களும் மாந்திரீகமும் செய்யவேண்டுமாயின் சித்தர்கள், முனிவர்கள் சாபந்தீர்க்க வேண்டும், யோக ஞானங்கள் செய்யவேண்டுமாயினும் சாபங்கள் தீர்க்க வேண்டும். எனவே முதலில் சாபங்களை நிவர்த்தி செய்து கொள் என்கிறார். இதன் மூலம் சாப நிவர்த்தியின் முக்கியத்துவத்தை உணரலாம்.
 
சாப நிவர்த்தி குறித்த எனது புரிதல்களை நாளைய பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.
 
சித்தரகசியம் - தீட்சைகள், சில விளக்கங்கள்
 
Labels: சித்த ரகசியம்
சித்தரியலில், சித்தரகசியம் என்பது தனிப் பெரும் பிரிவு. இதனை நான் உணர்ந்திட்ட வகையில் எளிமையாய் தனித் தனியே தலைப்புகள் பிரித்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.அந்த வகையில் தீட்சைகள் தொடர்பான பதிவுகளின் பின்னூட்டங்களிலும், மின்னஞ்சலிலும் பலர் தங்களின் ஐயங்களை எழுப்பியிருந்தனர். அவை தொடர்பாக தனித்தனியே பதில் சொல்வதைக் காட்டிலும் ஒரு தனி பதிவாக தொகுத்திடலாம் என இந்த பதிவினை எழுதுகிறேன்.
 
தீட்சைகள் என்பது குருவானவர் தனது சீடர்களுக்கு மெய்ஞானம் மற்றும் விஞ்ஞானத்தின் ஒவ்வொரு கட்டங்களை உணர்த்திடும் ஒரு தொடர் நிகழ்வாகவே கருதப் படுகிறது.இந்த படிநிலைகளை அடையும் தகுதிகள் கடுமையான பயிற்சி மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய முயற்சியினால் மட்டுமே சாத்தியமாகும். இந்த பயிற்சி நிலைகளை சீடனின் பக்குவத்திற்கேற்ப குருவானவர் அருளிச் சொல்வார்.இதனையே குருவழிகாட்டல் அல்லது குருவருள் என்ற பொது வார்த்தையினால் குறிப்பிடுகிறோம்.
 
சிவதீட்சையில் முப்பத்தி இரண்டு மந்திரங்கள் இருப்பதை பார்த்தோம். இவை ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான பலன்கள் இருப்பதையும் பார்த்தோம். பலர் நமக்கு தேவையான மந்திரத்தை மட்டும் சொல்லி பலனடைய வாய்ப்பு உண்டா என வினவியிருந்தனர். நானறிந்த வகையில் அதற்கான சாத்தியங்கள் இல்லை என்றே நினைக்கிறேன். இந்த முப்பத்தி இரண்டு மந்திரங்களும் ஒவ்வொரு படிநிலையாக கருதப் படுகிறது.ஒவ்வொரு நிலையாக பூரணத்துவம் பெற்று மந்திரம் சித்தியடைந்த பலனை உணர்ந்த பின்னரே அடுத்த நிலைக்கு முன்னேறிச் செல்லுதல் வேண்டும்.
 
ஒரு லட்சம் மந்திரங்களையும் ஒரே அமர்வில் செபிக்க வேண்டுமா அல்லது பிரித்து நம் வசதிக்கேற்ப செபிக்கலாமா என்கிற கேள்விக்கு என்னிடம் இருக்கும் ஒரே பதில் இதனை தீர்மானிக்க வேண்டிவர் குருநாதரே ஆவார். சீடனின் உடல் மற்றும் மனப் பக்குவத்தினை பொறுத்து குருவானவர் செபிக்கும் முறையினை தீர்மானிப்பார்.குருவுக்கு மேல் எதுவும் இல்லையென்பதே சித்தரியலின் அடிப்படை கோட்பாடு.குருவே ஆதியும் அந்தமுமானவர்.
 
அகத்தியர் அருளிய மந்திரங்களை செபிக்கும் போது குறிப்பிட்ட மந்திரங்களுக்கு முன்னர் “ஓம்” என்கிற பிரணவத்தினையும் சேர்த்தே செபிக்க வேண்டுமென தெளிவாக கூறியிருக்கிறார். இது தொடர்பான பாடல் மற்றும் விளக்கங்களை முந்தைய பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன்.சில மந்திரங்கள் ஓம் என்று துவங்கினால் கூட அதற்கு முன்னர் இன்னொரு ஓம் சேர்த்து இரு முறை ஓமென செபித்தே மந்திரம் சொல்ல வேண்டும்.எனவே மந்திரம் எப்படி இருந்தாலும் துவக்கத்தில் பிரணவமந்திரத்துடனே அகத்தியர் அருளிய அனைத்து மந்திரங்களையும் செபிக்க வேண்டும்.
 
சிவதீட்சை மந்திரங்கள் ஒவ்வொன்றையும் ஒரு லட்சம் தடவை செபிக்க வேண்டுமென அகத்தியர் தனது பாடலில் குறிப்பிட்டிருப்பதால், மிகச் சரியாக ஒரு லட்சம் தடவை செபிக்க வேண்டியது அவசியமாகிறது.இந்த மந்திரங்களை செயல்படுத்தும் படிநிலைகளைப் பற்றி எதிர்வரும் பதிவுகளில் பகிர்ந்து கொள்கிறேன்.
 
உடற்கட்டு மந்திரங்கள், சிவதீட்சை மந்திரங்கள் இவற்றில் எதனை முதலில் பயில வேண்டுமென்கிற கேள்விக்கு அடுத்ததாக எழுதவிருக்கும் பதிவுகளில் விடையிருக்கிறது. தொடர்ந்து வாசித்து வாருங்கள்.
 
அடுத்த பதிவில் சாபநிவர்த்தி பற்றிய தகவல்களுடன் சந்திக்கிறேன்.
 
சித்தரகசியம் - சிவதீட்சைகள் நிறைவுப் பகுதி
 
Labels: சித்த ரகசியம்
கடந்த மூன்று தினங்களாய் அகத்தியர் அருளிய சிவதீட்சைகளைக் குறித்த தகவல்களை பார்த்தோம், அந்த வகையில் கடைசி எட்டு தீட்சைகளை பற்றி இந்த பதிவில் காண்போம்.
 
"கெவுனமது ஒடவென்றால் ஐயைந்து தீட்சை
கேளு நீ ஏ ஏ ஏ ஊ ஊ ஊ வென்று லட்சம்
மவனமது சித்தியப்பா இருப்பதாறில்
மாதாவின் தீட்சையது இஷாய இஷாய ஓம்என்று லட்சம்
சிவனாகும் இருபத்தேழ் தீட்சை தன்னில்
செப்புவேன் ஓம்சிவாய சிவா றீங் கென்று லட்சம்
புவனமதில் இருபத்தி யெட்டாந் தீட்சை
பூரிப்பாய் சிவஓம் சிவாயநமவெனப் புகழுண்டாமே."
 
- அகத்தியர் -
 
இருபத்தி ஐந்தாவது தீட்சையைக்கேள். கெவுனம் ஓடவென்றால் இதைக்கேள். "ஏ ஏ ஏ ஊ ஊ ஊ" என்று லட்சம் முறை செபிக்க இந்த தீட்சை சித்தியாகும் என்கிறார்.
 
இருபத்து ஆறாவது தீட்சையைக்கேள், இது மாதாவின் தீட்சை இது, "இஷயா இஷயா ஓம்" என்று லட்சம் முறை செபிக்க மௌனம் சித்தியாகும் என்கிறார்.
 
இருபத்தி ஏழாவது தீட்சையைக்கேள். இத்தீட்சையில் நீயே சிவனாவாய். அதைச் சொல்கிறேன். "ஓம் சிவாய சிவா றீங்"என்று லட்சம் முறை செபிக்க வேண்டும் என்கிறார்.
 
இருபத்தி எட்டாவது தீட்சையைக்கேள். "சிவ ஓம் சிவாய நம" என்று லட்சம் முறை செபிக்க உலகத்தில் பூரிப்பான புகழ் உண்டாகும் என்கிறார் அகத்தியர்.
 
"புகழுண்டாம் இருபத்தி ஒன்பதாந் தீட்சை
போற்றுவாய் சவ்வும் மவ்வும் என்று லட்சம்
நெகிளாது அய்யாறு தீட்சையப்பா
நிலைத்தவர்க்கு மங் சங் கங் கென்று லட்சம்
அகமகிழ உன்தேகம் ஒருநாளுங் தான்
அழியாது நரைதிரையும் இல்லையில்லை
உகம்வறைக்கும் இருத்துமடா முப்பதொன்று
ஓதுவாய் ஸ்ரீம் றீம் கென்று தானே."
 
- அகத்தியர் -
 
இருபத்தி ஒன்பதாவது தீட்சையைக்கேள். இது போற்றுதற்குரிய புகழ் கிடைக்கும். அதற்கு "சவ்வும் மவ்வும்" என்று லட்சம் முறை செபிக்க வேண்டும் என்கிறார்.
 
முப்பதாவது தீட்சையைக்கேள். "மங் சங் கங்" என்று லட்சம் உரு செபிக்க
உன் தேகம் ஒருநாளும் அழியாது. அகம் மகிழ நரையும் இல்லை திரையும் இல்லை. யுகம் வரைக்கும் உன் தேகத்தை நிலைநிறுத்தும், "ஸ்ரீம் றீம்" என்று ஓதுவாய் லட்சம் உரு இது முப்பத்தியொன்றாம் தீட்சை என்கிறார்.
 
"என்றுதான் லட்சமுரு செபித்தாற் சித்தி
இறவாமல் இருத்துமடா கோடிகாலம்
நன்றுகாண் முப்பத்தி ரெண்டாந் திட்சை
நங் கிலி சிங் கிலி என்றே லட்சம்
மன்றுள்ள காலம்வரை இரு;ததுந்தேகம்
வாழ்;த்திநீ தோத்திரங்கள் செய்துகொள்வாய்
கொன்றாலும் வாள்கொண்டு வெட்டினாலும்
குறையாமல் வாள்வெட்டுப் பொருந்துந்தானே."
 
- அகத்தியர் -
 
முப்பத்து இரண்டாந் தீட்சைகேள். "நங் கிலி சிங் கிலி" என்று லட்சம் உரு செபிக்க கோடி காலம் வரை இறவாமலிருத்தும் மற்றுமுள்ள காலமனைத்தும் வாழ்த்தி தோத்திரங்கள் செய்து கொள்வாய். கொன்றாலும் வாள் கொண்டு வெட்டிப்போட்டாலும் வெட்டுப்பட்ட இடம் சற்றும் குறையாமல் ஒட்டிக்கொள்ளும் என்கிறார். இதுவரை அருளிய தீட்சைகளை திறம்பட முடிப்பது அத்தனை இலகுவானதல்ல என்கிறார்.
 
இந்த தீட்சைகளில் கூறப் பட்டிருக்கும் மந்திரங்களை வெற்று ஒலிகள் என ஒதுக்கி விட இயலாது. இதன் பின்னால் மறைந்திருக்கும் சூட்சுமங்கள் புலப்படுமாயின் மகத்தான பல விஷயங்கள் புலனாகலாம்.குருவருளால் மட்டுமே இவையனைத்தும் சாத்தியமாகும். எல்லாம் வல்ல குருவருளை வேண்டி வணங்கி தீட்சைகள் பற்றிய தொடரை நிறைவு செய்கிறேன்.
 
தீட்சைகள் குறித்து பின்னூட்டங்கள் மற்றும் தனிமடலில் எழுப்பப் பட்ட சில கேள்விகளுக்கு நானறிந்த விளக்கங்களுடன் நாளைய பதிவில் சந்திக்கிறேன்.
 
சித்தரகசியம் - சிவதீட்சைகள் தொடர்ச்சி..
 
Labels: சித்த ரகசியம்
கடந்த இரு தினங்களாய் அகத்தியர் அருளிய சிவதீட்சைகளில் முதல் பதினாறு தீட்சைகளைப் பற்றி பார்த்தோம். இன்றைய பதிவில் அடுத்த எட்டு சிவதீட்சைகளைப் பற்றி பார்ப்போம்.
 
"வாய்ப்பான பதினேழாஞ் சிவதீட்சை
வழுத்துவேன் றீங் றீங் ஸ்ரீம் ஸ்ரீம் என்றே லட்சம்
காய்ப்பான நரைதிரையும் இல்லையில்லை
கற்பமதை உண்டிடவே சுருக்குமெத்த
ஏய்ப்பார்கள் ஏய்ப்புக்குள் அகப்படாதே
ஈஸ்வரியாள் தீட்ரைச பதினெட்டுங்கேளு
தீய்ப்பான சங் சிங் ரா ரா வென்று
செபித்திடுநீ லட்சமுரு சட்டைபோமே."
 
- அகத்தியர் -
 
"றீங் றீங் ஸ்ரீம் ஸ்ரீம்" என்று லட்சம் முறை செபிக்க காய்ப்பான நரையும் இல்லை. திரையும் இல்லை. கற்பத்தை உண்ண சுருக்கான வழி. வழியறியாதவர்கள் உன்னை ஏய்த்து விடுவார்கள். அவர்களின் ஏய்ப்புக்கு நீ ஆளாகிவிடாதே என்கிறார்.மேலும் இது ஒரு நல்வாய்ப்பு என்கிறார் அகத்தியர். இதுவே பதினேழாம் சிவதீட்சையாகும்.
 
"சங் சிங் ரா ரா" என்று லட்சம் முறை செபிக்க சட்டை போகும். இது ஈஸ்வரியாளின் தீட்சை என்கிறார். இது பதினெட்டாவது தீட்சையாகும்.
 
"சட்டைதள்ளும் பத்தொன்பதாந் தீட்சை தன்னை
தான்கேளு திரிநேத்திராயா வா வா வென்று
இட்டமுடன் லட்சமுரு செபித்தாற்சித்தி
இருபதாஞ் தீட்சையது ஸ்ரீங்கார தேவாயநமா வென்று
தொட்டதுவே லட்சத்திற்கு சித்தியாகும்
சொல்லுவேன் மூவேழு தீட்சை கேளு
அட்டதிசை வெல்லுமடா இங் அங் றங் கென்றுந்தான்
ஐநான்கு தீட்சைரெண்டும் அறையக் கேளே."
 
- அகத்தியர் -
 
"திரிநேத்திராயா வா வா" என்று விருப்பமுடன் லட்சம் முறை செபிக்க பத்தொன்பதாவது தீட்சை சித்தியாகும்.இந்த தீட்சை சட்டையை தள்ளும் என்கிறார்.
 
"ஸ்ரீங்காரதேவாய நமா" என்று லட்சம் முறை செபிக்க தொட்டதெல்லாம் சித்தியாகும்.இது இருபதாவது சிவதீட்சையாகும்.
 
"இங் அங் றங்" என்று லட்சம் முறை செபிக்க எட்டுத் திசையையும் வெல்லலாம்.இதுவே இருபத்தியொன்றாவது சிவதீட்சையாகும்.
 
"அரையக்கேள் அரிஅரி ஓம் என்றுவோத
அப்பனே லட்சத்திற் சித்தியாகும்
முறையாக இருபத்து மூன்றாந் தீட்ரைச
மொழிந்திடுவாய் ரா ரா றீம் றீம் என்று
குறையாமற் செய்துவிடு சித்தியாகும்
குணமாக மூவெட்டுத் தீட்சை கேளு
மறைவாக லீ லீ லீ அரஹர றீ றி என்று
வாழ்த்துவாய் லட்சமுரு கெவுனிப்பாயே."
 
- அகத்தியர் -
 
"அரி அரி ஓம்" என்று என்று லட்சம் முறை செபிக்க இருபத்தி இரண்டாவது சிவதீட்சை சித்தியாகும்.
 
"ரா ரா ரா றீம் றீம்" என்று லட்சம் முறை செபிக்க இருபத்தி மூன்றாவது சிவதீட்சை சித்தியாகும்.
 
குணமாகவும் மறைவாகவும் "லீ லீ லீ அரஹர றீ றீ றி"என்று லட்சம் முறை செபித்து வாழ்த்துவாய் என்கிறார் அகத்தியர்.
 
நாளைய பதிவில் கடைசி எட்டு சிவதீட்சைகள் குறித்து பார்ப்போம்.
 
சித்தரகசியம் - சிவதீட்சைகள் தொடர்ச்சி..
 
Labels: சித்த ரகசியம்
அகத்தியர் அருளிய சிவதீட்சைகளில் முதல் எட்டு தீட்சைகளை நேற்றைய பதிவில் பார்த்தோம்.அடுத்த எட்டு தீட்சைகளைப் பற்றி இன்றைய பதிவில் காண்போம்.
 
"உனைச் சேர்வார் சித்தர்களுஞ் சிவனார் தீட்சை
உன்பதுதான் வங் கிலியும் சிங் அம் ஐம் என்றுலட்சம்
வினையொழிந்து என்தேகம் கல்போலாகும்
மெய்யான சட்டையொன்று தள்ளிப்போடும்
தினந்துதிக்கும் சிவதீட்சை பத்தைத்தானுஞ்
செப்பார்கள் செப்புகிறென் வம் வும் அம் இம் என்று
எனைப்போலே சொல்வார்கள் தேகம் பொன்னாம்
இனிதான சிவதீட்சை ஓதினேனே."
 
- அகத்தியர் -
 
"வங் கிலியும் சிங் அம் ஐம்" என்று லட்சம் முறை செபிக்க உன் வினைகள் எல்லாம் தீர்ந்து உடல் கல்லைப் போல் உறுதிபெறும்.இவ்வாறு ஒன்பதாவது தீட்சை சித்தியாகும் என்கிறார்.
 
"வம் வும் அம் இம்" என்று லட்சம் முறை செபித்தால் தேகம் பொன் போல ஆகும். இவை இனிதான பத்தாவது சிவதீட்சை ஆகும் என்கிறார் அகத்தியர்.
 
"ஓதியதோர் சிவதீட்சை பதினொன்றுந்தான்
உரைக்கின்றேன் மங் றீங் றீங் கென்று லட்சம்
பாதிமதி சடைக்கணிந்த சிவனார்பாதம்
பணிந்து தொண்ட னாய் இருப்பாய் செய்துபாரு
நீதிபெறும் பன்னிரெண்டாஞ சத்திதீட்சை
நிலைத்தவர்க்குத் தற்புருசம் வம் ஆம் நம் என் றுலட்சம்
சந்தித்துச் செபித்திடவே சித்தியாகும்
சட்டையொன்று தள்ளுமடா கெவுனமாமே."
 
- அகத்தியர் -
 
"மங் றீங் றீங்" என்று லட்சம் முறை செபிக்க பதினோராவது தீட்சை சித்திக்கும்.இது வரை ஓதிய பத்து தீட்சையினையும் மொத்தமாக உரைத்ததைப் போன்றது இந்தத் தீட்சையாகும் என்கிறார். பாதி மதியை சடையில் அணிந்த சிவபெருமானின் திருவடியைப் பணிந்து என்றென்றும் தொண்டனாய் இருப்பாய் செய்துபார் என்கிறார் அகத்தியர்.
 
இனி, பன்னிரெண்டாவது சக்தி தீட்சையை நீதி பெறக்கேள். கற்பம் உண்டு நிலைத்தவர்க்கு சிவபெருமானின் ஒருமுகமான தற்புருசமே இது. "வம் ஆம் நம்" என்று லட்சம் உரு செபிக்க சித்தியாகும். கெவுன மார்க்கம் செலல ஏதுவாக சட்டை ஒன்றும் கிடைக்கும் அதை அணிந்தால் கெவுன சித்தி கிடைக்கும் என்கிறார் அகத்தியர்.
 
"ஆமப்பா சத்திபதி மூன்றாந் தீட்சை
அறிவுடனே ஊம் ஆம் என்றே லட்சம்
நாமப்பா செபித்திடவே வச்சிரதேகம்
நமனும்இவன் கிட்டவந்து அணுகான் பாரு
ஊமப்பா பதினாலாஞ் சத்தி தீட்சை
உண்மையாம் றம் றூம் ஸ்ரீம் அவ்வு மென்று
தாமப்பா லட்சமுரு செபித்தாற்சித்தி
சாயுட்சய பதம்பெறுவார் சார்ந்துகேளே!"
 
- அகத்தியர் -
 
அறிவுத் தெளிவுடன் "ஊம் ஆம்" என்று லட்சம் முறை செபிக்க தேகம் வச்சிர தேகமாகும். எமன் கூட அருகில் வர மாட்டான்.இவ்வாறு பதின்மூன்றாவது தீட்சை சித்திக்கும் என்கிறார்.
 
"றம் றூம் ஸ்ரீம் அவ்வு" என்று லட்சம் முறை செபிக்க பதின்நான்காவது தீட்சை சித்தியாகும். சாயுட்சய பதம் பெறுவார். இதை சார்ந்து கேள் என்கிறார் அகத்தியர்.
 
"சார்ந்துகேள் பதினைந்தாஞ் சத்திதீட்சை
தயவாக ஸ்ரீம் றீம் றீம் ஓம் என்று லட்சம்
தேர்நது பார் தேகமுந்தான் கல்போலாகும்
சிவசிவா நாதவிந்து கட்டிப்போகும்
ஆய்ந்தவர்க்குப் பதினாறாந் தீட்சை கேளு
அப்பனே சங் இங் றங் கென்றே லட்சம்
மாந்தளிர்போல் தேகமுள்ள மனோன்மணியாள்
வருவாளே மகனென்று பணிந்து கொள்ளே."
 
- அகத்தியர் -
 
"ஸ்ரீம் றீம் றீம் ஓம்" என்று லட்சம் முறை செபிக்க தேகம் கல்போலாகும். தேர்ந்துபார். என்ன அற்புதம் சிவ சிவா நாதவிந்து கட்டிப்போகும்.இதுவே பதினைந்தாவது தீட்சை ஆகும். இவைகளை ஆய்ந்தறிந்தவர்களுக்குப் பதினாறாம் தீட்சையைச் சொல்கிறேன் கேள் என்று தொடர்கிறார்.
 
"சங் இங் றங்" என்று லட்சம் முறை செபிக்க மாந்தளிர் போல் தேகமுள்ள மனோன்மணித் தாய் தன் இருகரம் நீட்டியபடியே மகனே என வருவாள். அவள் வரும் போதே அவளைப் பணிந்துகொள் என்கிறார் அகத்தியர்.இதுவே பதினாறாவது தீட்சையாகும்.
 
நாளைய பதிவில் அடுத்த எட்டு சிவதீட்சை முறைகளைப் பற்றி பார்ப்போம்.
 
சித்தரகசியம் - சிவ தீட்சைகள்!
 
Labels: சித்த ரகசியம்
அகத்தியர் அருளிய முப்பத்தி இரண்டு சிவ தீட்சைகளில் முதல் எட்டு திட்சைகளைப் பற்றி இன்றைய பதிவில் காண்போம்.தீட்சைகளில் முதன்மையானது இந்த சிவ தீட்சைகள்தான்.இந்த தீட்சைகளை முறையாக குருவின் மூலமாய் பெற்று செபிக்க தீட்சைகள் சித்திக்கும் என்கிறார் அகத்தியர்.
 
"தீட்சையிலே முதற்தீட்சை சிவதீட்சைதான்
ஸ்ரீம் அம் ஓம் யென் றுலட்சம் ஜெபித்துவோதக்
காட்சிபெறத் தேகமெல்லாம் வியர்வை காணும்
கண்மாய்கை இல்லையடா கண்டுதேறு
ஆச்சுதடா சிவதீட்சை ரெண்டுங்கேளு
ஆம் ஓம் ஹரீம் ரீம் யென்று நீயும்
மூச்சடா உள்ளடங்கும் லட்சமோத
முத்தியுண்டாஞ் சத்தியுண்டாஞ் சித்தியாமே."
 
- அகத்தியர் -
 
"ஸ்ரீம் அம் ஓம்" என்று லட்சம் முறை செபிக்க முதல் தீட்சை சித்தியாகும். அப்போது இறைவனின் திருக்காட்சியைக் காணலாம் என்கிறார். காட்சியைக் காணும் போது தேகமெல்லாம் வேர்த்துப் போகும். ஆனால் இந்தக் காட்சி கண் மாயை அல்ல, இதைக் கண்டு தேறுவதே முதல் தீட்சையாகும் என்கிறார் அகத்தியர்.
 
"ஆம் ஓம் ஹரீம் ரீம்" என்ற மந்திரத்தினை லட்சம் முறை செபிக்க இரண்டாவது தீட்சை சித்தியாகும். அப்போது மூச்சு உள்ளடங்குவதுடன் , முக்தியும், சக்தியும் சித்தியாகும் என்கிறார் அகத்தியர்.
 
"சித்தியாஞ் சிவதீட்சை மூன்றுகேளு
செப்புவேன் குறோம் ஸ்ரீம் றீம் றீம் நம் யென்று லட்சம்
பத்தியாய்ச் செய்துவர மோட்சமாகும்
பாணுவைப்போற் தேகமெல்லாம் ஒளியுமாகும்
துத்தியஞ்செய் சிவதீட்சை நாலுகேளு
துடியுடனே ஸ்ரீங் அங் உங் கென்று
முத்திபெற லட்சமுருச் செபித்தாற்சித்தி
மோட்சமய்யா தேவதைகள் பணியுந்தானே."
 
- அகத்தியர் -
 
"குறோம் ஸ்ரீம் றீம் றீம் நம்" என்ற மந்திரத்தினை லட்சம் முறை செபிக்க மூன்றாவது தீட்சை சித்தியாகும். அப்போது சந்திரனை போல தேகம் ஒளிவீசும் என்கிறார்.
 
"ஸ்ரீங் அங் உங்" என்று லட்சம் முறை செபிக்க நான்காவது தீட்சை சித்தியாகும். அப்போது மோட்சமும், தேவதைகள் உனக்கு பணியும் தன்மையும் ஏற்படும் என்கிறார் அகத்தியர்.
 
"பணிந்துதான் சிவதீட்சை அஞ்சுங்கேளு
பண்பாக யங் வங் றீங் றுந்தான்
துணிந்தோது லட்சமுருச் செபித்தாற்சித்தி
தொண்டுசெய்வார் தேவதைகள் சட்டைக்கும்
அணிந்துகொள்வாய் சிவதீட்சை ஆறுங்கேளு
அன்புடனே சங் ரங் உம் ஆம் என்றுலட்சம்
குனிந்துநிமிர் தேகமதில் வாசம் வீசும்
குணமாகுந் தெகசித்தி சுருக்குத்தானே."
 
- அகத்தியர் -
 
"யங் வங் றீங்" என்று லட்சம் முறை செபிக்க ஐந்தாவது தீட்சை சித்தியாகும். அப்போது தேவதைகள் ஒரு சட்டையைத் தரும். அதை அணிந்துகொள் என்கிறார்.
 
"சங் ரங் உம் ஆம்" என்று லட்சம் முறை செபிக்க ஆறாவது தீட்சை சித்தியாகும். அப்போது தேகத்தில் வாசம் வீசும். அத்துடன் தேகசுத்தியும் சித்திக்கும் என்கிறார் அகத்தியர்.
 
"தானேசெய் சிவதழுட்சை ஏழுநீயும்
சந்தோஸ மாய்ஓது இங் ரங் அவ்வு மென்றுலட்சம்
மானேந்தும் ஈசுவரனும் அருகில் நிற்பார்
வானவர்கள் மகிழ்வாக வாவென்பார்கள்
நானென்ற தீட்சையெட்டும் உற்றுக்கேளு
நன்றாக மங் றீங் ரா ரா வென் றுலட்சம்
ஆனந்த முண்டாகுந் தேவர்வந்து
அன்பாக உனைச்சேர்ந்து அணைவார்பாரே."
 
- அகத்தியர் -
 
"இங் ரங் அவ்வு" லட்சம் முறை செபிக்க, மானை கையில் ஏந்தி இருக்கும் சிவன் அருகில் இருப்பார். வானவர்கள் மகிழ்ச்சியுடன் வா வா என்று அழைப்பார்கள் என்கிறார் அகத்தியர்.
 
"மங் றீங் ரா ரா" என்று லட்சம் முறை செபிக்க ஆனந்தம் உண்டாகும். அத்துடன் தேவர்கள் வந்து உன்னுடன் இணைவார்கள் என்கிறார் அகத்தியர்.
 
இந்த தீட்சைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு படி நிலையாக இருக்க வேண்டும். இந்த மந்திரங்களுக்கு நேரடி பொருள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை.விவரம் அறிந்தவர்கள் விளக்கினால் தன்யனாவேன்.அடுத்த எட்டு தீட்சைகளைப் பற்றி நாளைய பதிவில் பார்ப்போம்.
 
சித்தரகசியம் - தீட்சைகள் ஓர் அறிமுகம
 
Labels: சித்த ரகசியம்
தீட்சை,தீக்கை என்கிற வார்த்தைகள் குரு சிஷ்ய பாரம்பர்யத்தில் மிக முக்கியமான ஒன்றாக கருதப் படுகிறது. தீட்சை என்பதற்கு சுத்திகரித்தல், புனிதப் படுத்துதல், தரம் உயர்த்துதல் என்கிற மாதிரி பொருள் கொள்ளலாம்.ஆறு வயதைக் கடந்த எவரும் தீட்சை பெற் தகுதியானவர்கள்.வேதங்களிளும் இந்த தீட்சைகள் பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன.இந்த பதிவுகளில் சித்த மரபியலில் வழ்க்கில் இருந்த தீட்சைகளைப் பற்றி பார்ப்போம்.
 
சித்தர்கள் உடலைப் பேணி பாதுகாப்பதன் மூலமாய் நீண்டகாலம் வாழ்ந்து சிறப்பான பல செயல்களை செய்திட முடியும் என கருதினர். தேடல்களும் தெளிதல்களுமான வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்தினை கடந்திட குருவின் வழிகாட்டுதல் தேவைப் படுகிறது. குருவின் வழிகாட்டுதல் அல்லது உபதேசமே தீட்சைகளாய் குறிப்பிடப் படுகிறாது.
 
அகத்தியர் தனது அகத்தியர் பன்னிரு காண்டம் மற்றும் அகத்தியர் மாந்திரீக காவியம் ஆகிய நூல்களில் தீட்சைகளைப் பற்றி விரிவாக கூறியிருக்கிறார்.இந்த தீட்சைகளை பின்வருமாறு அறிமுகம் செய்கிறார்.
 
"தயவான தீட்சைவிதிக் காதிகாப்பு
தான்பாட வாராய்ந்து தெளிந்துபார்த்து 
செயலான முப்பதி ரெண்டுதீட்சை
சித்தி செய்த பேர்க்கெல்லாம் ஞானம்சித்தி
சுகமான பாவவினை அற்றுப்போகும்
சோதிசிவ பாதமதைக் காணலாகும்
நயமாக எந்தனுக்கு உபதேசித்த 
நற்குமரன் திருவருளே தீட்ட்சைக்காப்பு"
 
- அகத்தியர் -
 
தான் நன்கு அறிந்து, ஆய்ந்து, தெளிந்த முப்பத்தி இரண்டு தீட்சைகளைப் பற்றி சொல்லப் போவதாகவும்.இவற்றை உணர்ந்து சித்தியடைந்தவர்களுக்கு ஞானம் பெருகும், பாவம் விலகும் என்கிறார்.மேலும் ஆதி சித்தனான சிவனின் பாத தரிசனம் கிடைக்குமாம்.இந்த தீட்சைகளை நற்குமரனான முருக பெருமான் தனக்கு அருளியதாகவும் கூறுகிறார்.
 
இவ்வாறு அகத்தியர் அருளிய அரிய தீட்சை முறைகளின் வகைகள், தன்மைகளை நாளைய பதிவில் பார்ப்போம்.
 
சித்த ரகசியம் - உடல்கட்டு மந்திரங்கள் செபிக்கும் முறை
 
Labels: சித்த ரகசியம்
சித்தர்களின் மந்திரங்கள் மிகவும் நுட்பமானவை. அவர்தம் பாடல்களில் மந்திரங்கள் மட்டுமே கூறப் பட்டிருக்கின்றன.இந்த மந்திரங்களை செபிப்பது மற்றும் செயலாக்கத்திற்கு கொண்டு வருவது போன்றவைகள் குருவினால் மட்டுமே கூறிட இயலும். தகுதியான குருவின் நெறிப் படுத்துதலை வலியுறுத்துவதன் பின்னனி இதுதான்.
 
இந்த உடல்கட்டு மந்திரங்களை செபிக்கும் முறைகளைப் பற்றி அகத்தியர் கூறியுள்ளதை இன்று பார்ப்போம்.மந்திரத்தை எவ்வாறு பெறுவது,அதன் மறைந்திருக்கும் சூட்சுமம் மற்றும் மந்திரத்தை செபிப்பது பற்றி பார்ப்போம்.
 
"தருவார்கள் ஓமென்ற அட்சரத்துள்
சகலஜீவ தயாபரனும் இதற்குள்ளாச்சு
வருவில்லா சிவயனார் மந்திரந்தானும் 
வடிவான அட்சரத்துள் இருப்பதாச்சு 
குருபரனான் வினாயகன்றன் சுழிதானப்பா
குவலயங் களுக்குமுன்னே பிறதமூலம்
திருவான வினாயகரின் சுழியை முந்திச்
செபிப்பாய்நீ யென்மந்திர ங்கள்முற்றே"
 
- அகத்தியர் -
 
குருபரனாம் வினாயகரின் சுழியான "ஓம்" என்ற அட்சரமே இந்த உலகங்களுக்கு எல்லாம் முன்னே தோன்றிய மூலமாகும். இந்த ஓம் என்ற அட்சரத்துக்குள் சகல ஜீவ தயாபரனும், சிவனின் மந்திரம் முதற்கொண்டு எல்லாமே அட்ங்கும் என்று சொல்லும் அகத்தியர், மேலும் திருவான வினாயகரின் சுழியை முதலில் செபித்தே தனது மந்திரங்கள் அனைத்தையும் செபிக்க வேண்டும் என்று சொல்கிறார்.
 
"அடக்குவாய் மந்திரத்தைக் காதில்கேளு
அன்புடனே ஓம் என்ற எழுத்தைச் சேரு
வடக்குமுகம் இருந்துலட்சம் உருத்தான்போடு"
 
- அகத்தியர் -
 
மனதை அடக்கி அன்புடனே மந்திரத்தை குரு உபதேசமாக காதில் கேட்டு மனனஞ் செய்து ஓம் என்ற எழுத்தைச் முன் சேர்த்து வடக்கு நோக்கி இருந்து லட்சம் உரு செபிக்க வேண்டும் என்கிறார்.
 
இத்துடன் உடல்கட்டு மந்திரங்கள் பற்றிய தகவல் பதிவு நிறைவடைந்தது.ஆர்வமும், முயற்சியும் உள்ள எவரும் குருவருளை வேண்டி வணங்கி இம் மந்திரங்களை பயன் படுத்திடலாம். இது தொடர்பாக விவரமறிந்தவர்கள் பின்னூட்டத்தில் தாமறிந்த தகவல்களை பகிர்ந்து கொள்ள அழைக்கிறேன்.
 
சித்த ரகசியம் - உடல்கட்டு மந்திரங்கள் தொடர்ச்சி..
 
Labels: சித்த ரகசியம்
சுக்கிரனுக்கான உடல் கட்டு மந்திரம்..
 
"இன்றுநீ சுக்கிரன்தன் கட்டுக் கேளு
இறீம் றீம் நசி மசி யென்று போடே"
 
- அகத்தியர் -
 
சுக்கிர பகவானின் உடல் கட்டு மந்திரத்தை கேளு "இறீம் றீம் நசி மசி" என்று லட்சம் உரு செபித்தால் சுக்கிர பகவானின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர்.
 
சனிக்கான உடல் கட்டு மந்திரம்..
 
"போடுவாய் சனிபகவான் கட்டுக்கேளு
புகழான ஸ்ரீம் றூம் றூம் என்று சொல்லி
தேடுவாய் லட்சமுருப் போடு போடே"
 
- அகத்தியர் -
 
சனி பகவானின் உடல் கட்டு மந்திரத்தை கேளு "ஸ்ரீம் றூம் றூம்" என்று லட்சம் உரு செபித்தால் சனி பகவானின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர்.
 
ராகுவுக்கான உடல் கட்டு மந்திரம்..
 
"திறமான இராகுவுட கட்டுதீர
நாடுவாய் அரீம் ஸ்ரீம் நசி மசி என்றுலட்சம்
நலமாகச் செபித்துவரக் கட்டுத் தீரும்"
 
- அகத்தியர் -
 
திறமான இராகு பகவானின் உடல் கட்டு மந்திரத்தை கேளு "அரீம் ஸ்ரீம் நசி மசி" என்று லட்சம் உரு நலமாகச் செபித்தால் இராகு பகவானின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர்.
 
கேதுவுக்கான உடல் கட்டு மந்திரம்..
 
"சாடுவாய் கேதுவுட கட்டு தீர
சரியாக அங் சிங் நசிமசி யென்றுலட்சம் போடே"
 
- அகத்தியர் -
 
கேது பகவானின் உடல் கட்டு மந்திரத்தை கேளு "அங் சிங் நசி மசி" என்று லட்சம் உரு செபித்தால் கேது பகவானின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகதியர்.
 
நவ கோள்களின் மந்திரங்களுடன், சனியின் மகன் என கருதப் படும் குளிகனுக்கும் உடல் கட்டு மந்திரங்களை அகத்தியர் அருளியிருக்கிறார்.
 
குளிகன் உடல் கட்டு மந்திரம்..
 
"நீடுவாய் குளிகனுட கட்டுத்தீர்க்க
நிட்சமாய் ஓம் ஐயும் ஐயுமென லட்சம்
தீர்ந்துவிடும் நவக்கிரக உடல்கட்டப்பா"
 
- அகத்தியர் -
 
குளிகனின் உடல் கட்டு மந்திரத்தை கேளு "ஓம் ஐயும் ஐயும்" என்று லட்சம் உரு செபித்தால் குளிகனின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர்.
 
அட்ட திக்கு பாலகர்களுக்கான மந்திரம்.
 
"பாரப்பா அட்டதிக்குப் பாலகர்க்குப்
பரிவான கட்டுப் பீஜத்தைக் கேளு
சீரப்பா வீட்சணிவா வா வீரா பார் பார் என்றும்
சிறப்பாகப் புறோம் புறோம் றீங் கங் சிங் சிங் என்றும்
கூறப்பா மங் டங் றீங் வங் வங் பங் என்றும்
குணமுடனே றீ றீ றீ றீ கிறாங் என்றும்
காரப்பா மங் ராங் ராங் வறீம் பம் வம் என்றும்
கணக்குலட்ச முருச் செபித்துப் போடே"
 
- அகத்தியர் -
 
"வீட்சணிவா வா வீரா பார் பார் புறோம் புறோம் றீங் கங் சிங் சிங் மங் டங் றீங் வங் வங் பங் றீ றீ றீ றீ கிறாங் மங் ராங் ராங் வறீம் பம் வம்" என்று எண்ணிக்கை குறையாது லட்சம் உரு செபித்தால் சித்தியாகும். இதுவே அட்டதிக்கு பாலகர் கட்டு மந்திரமாகும் என்கிறார்.
இந்த உடல் கட்டு மந்திரங்கள் சித்தியானால் உனது உடலை கிரகசாரங்களோ, அட்டதிக்குப் பாலகர்களோ, பஞ்ச பூதங்களோ கட்டுப்படுத்த இயலாது என்று சொல்லும் அகத்தியர், மந்திரம் சித்தியான பின்னர் உனது உடல் முழுமையாக உனது கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்கிறார்.
 
சித்த ரகசியம் - “உடல் கட்டு மந்திரங்கள்”
 
Labels: சித்த ரகசியம்
நமது உடலானது பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் ஆனது. பஞ்சபூதங்கள் பிரபஞ்ச சக்திகளான கோள்கள், அட்டதிக்கு பாலகர்களுக்கு கட்டுப்பட்டது.பஞ்சபூதங்களின் கலவையான மனித உடல் வாழ்நாள் முழுவதும் இவற்றின் ஆதிக்கத்தில்தான் இருந்தாக வேண்டும். இந்த கட்டுப் பாடுகளை உடைத்தால் மட்டுமே எந்தவொரு மனிதரும் சிறப்பாகவும், சுயமாகவும் செயல்பட முடியும் என சித்தர்கள் நம்பினர்.இதற்கான தேடல்களும் தெளிவுகளுமே இந்த பதிவு...
 
பிரபஞ்ச சக்திகளின் ஆதிக்கத்தில் இருந்து உடலை வெளியேற்றுவது, வெளியேறிய பின்னர் அந்த உடலை காப்பது என இரண்டு அம்சங்களை உள்ளடக்கியதாக “உடல் கட்டு மந்திரங்கள்” கருதப் படுகிறது.இந்த உடல் கட்டு மந்திரங்கள் பற்றி அகத்தியர் தனது அகதியர் பன்னிரு காண்டம் மற்றும் அகதியர் மாந்திரீக காவியம் என்கிற நூலில் விரிவாக குறிப்பிட்டிருக்கிறார். ஒன்பது கோள்களுக்கும் என தனித் தனியே ஒன்பது மந்திரங்களும், அட்ட திக்கு பாலகர்களுக்கென மந்திரமும் கூறப் பட்டிருக்கிறது.
 
இனி நவ கோள்களின் உடல் கட்டு மந்திரங்களைப் பற்றி பார்ப்போம்.ஒவ்வொரு மந்திரமாக செபித்து அதில் சித்தியடைந்த பின்னரே அடுத்த மந்திரத்தை முயற்சிக்க வேண்டும் என அகத்தியர் கூறுகிறார். அதாவது...
 
"பக்குவமாய் உடற்கட்டு நிவர்த்தி செய்ய 
மாந்திரீக பீஜத்தை இதிலே சொன்னேன் 
வகையோடே மந்திரத்தை தான் மைந்தா
தனி தனியாய் உருத்தான் போடு போடே"
 
- அகத்தியர் -
 
சூரியனுக்கான உடல் கட்டு மந்திரம்..
 
"உருவாக சித்தி செய்வாய் அருக்கன்கட்டு
உத்தமனே அம் ஹீம் என்று லட்சம்
திருவாக செபித்துவர கட்டுத்தீரும்"
 
- அகத்தியர் -
 
முதலில் சூரியன் உடல் கட்டு தீர "அம் ஹீம்" என்று லட்சம் உரு செபித்தால் சூரியன் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர்.
 
சந்திரனுக்கான உடல் கட்டு மந்திரம்..
 
"ஜெயம் பெற்ர சந்திரனார் கட்டுத் தீர
அருவாக ஹீம் உறீம் என்று லட்சம்
அன்பாக செபித்துவர கட்டுத்தீரும்"
 
- அகத்தியர் -
 
ஜெயம் பெற்ற சந்திரன் கட்டு தீர "ஹீம் உறீம்" என்று லட்சம் உரு செபித்தால் சந்திரன் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர்.
 
செவ்வாய்க்கான உடல் கட்டு மந்திரம்..
 
"நிருவாகமான செவ்வாய் கட்டுத் தீர
ஸ்ரீம் றீங் நசி மசி யென்று லட்சம் போடே"
 
- அகத்தியர் -
 
நிருவாகமான செவ்வாயின் கட்டு தீர "ஸ்ரீம் றீங் நசி மசி" என்று லட்சம் உரு செபித்தால் செவ்வாயின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர்.
 
புதனுக்கான உடல் கட்டு மந்திரம்..
 
"என்றுநீ புதன்கட்டுத் தீரக்கேளு
இன்பமுடன் வங் யங் நசிமசி யென்று லட்சம்
நன்றுஉருச் செபித்திடவே கட்டுத் தீரும்"
 
- அகத்தியர் -
 
புதன் கட்டுத் தீரும் மந்திரத்தை கேளு சந்தோசமாக "வங் யங் நசி மசி" ன்று லட்சம் உரு செபித்தால் புதனின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர்.
 
குருவுக்கான உடல் கட்டு மந்திரம்..
 
சித்தரகசியம் - சாபநிவர்த்தியின் வகைகள்
 
சித்தரகசியம் - தீட்சைகள், சில விளக்கங்கள
 
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில்வாசிக்க...
 
இந்த மந்திரங்களை செபிக்கும் முறைகளைப் பற்றி நாளைய பதிவில் பார்ப்போம்.
 
"நாட்டமுள்ள குருகட்டு தீரக் கேளு
அன்றுநீ ஸ்ரீம் றீம் நசிமசி யென்றுலட்சம்
அன்பாக செபித்தாக்கால் கட்டுத்தீரும்"
 
- அகத்தியர் -
 
நாட்டமுள்ள குருபகவான் கட்டுத் தீரும் மந்திரத்தை கேளு "ஸ்ரீம் றீம் நசி மசி" என்று அன்பாக லட்சம் உரு செபித்தால் குருபகவானின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர்.
 
அடுத்த நான்கு கோள்களின் உடல் கட்டு மந்திரம் , சனி பகவானின் மகன் என கருதப் படும் குளிகனுக்கான உடல் கட்டு மந்திரம் மற்றும் அட்ட திக்கு பாலகர்களுக்கான மந்திரத்துடன் நாளைய பதிவில் சந்திக்கிறேன்.
 
பின் குறிப்பு :
இந்த பதிவுகளில் உள்ள விவரங்கள் அனைத்தும் ஒரு தகவல் பகிர்வே, மூட நம்பிக்கைகளை பரப்புவதோ அல்லது மத நம்பிக்கைகளை விதைப்பதோ எனது நோக்கமில்லை.இவற்றை மூடநம்பிக்கை, பழங்கதை என புறந்தள்ளாது ஆராயவும், விவாதிக்கவும் முற்பட்டால் ஏதேனும் தெளிவுகள் கிடைக்கலாம். 
 
No comments:

Post a Comment