Wikipedia

Search results

Sunday, 14 August 2016

சனி கிரகத்தின் வளையத்தில் மடிப்பு இருப்பது நிஜமா?

சனி கிரகத்தின் வளையத்தில் மடிப்பு இருப்பது நிஜமா?

சனி கிரகத்தின் வளையத்தில் மடிப்பு இருப்பது நிஜமா?

அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா, சமீபத்தில் காசினி விண்கலம் அனுப்பியுள்ள சனி கிரகத்தின் படங்களை வெளியிட்டுள்ளது. அதில், சனிக்கே உரித்தான அதைச் சுற்றியுள்ள வளையங்களின் விளிம்பில், 'மடிப்பு' ஏற்பட்டிருப்பது போலத் தெரிவது, விஞ்ஞானிகளை வியக்கவைத்திருக்கிறது.

இந்த புதிரான தோற்றத்திற்கு, அறிவியல்பூர்வ விளக்கத்தையும் நாசா விஞ்ஞானிகளே வெளியிட்டுள்ளனர். இந்த தோற்றப் பிழைக்கு காரணம், சனி கிரகம் தான். சனியைச் சுற்றி அமைந்துள்ள பிரம்மாண்டமான வளையங்களின் மீது படும் ஒளியை, அவற்றின் அருகே உள்ள பெரிய கிரகமான சனியின் வளிமண்டலம் நோக்கி ஈர்க்கப்படுகிறது.

இந்த புதிரான தோற்றத்திற்கு சனியிலிருந்து பிரதிபலிக்கும் இந்த ஒளியை படம்பிடிக்கும் காசினியின் கேமராவும், காரணம் என்கின்றனர், விஞ்ஞானிகள்.இருதரப்பிலும் ஏற்படும் இந்த ஒளிச்சிதறல்களால் சனியின் வளையங்களின் விளிம்புகளில் மடிப்பு ஏற்படுவதுபோலத் தெரிகிறது. சனியின் வளையங்களை, 18 லட்சம் கி.மீ., தொலைவிலிருந்து காசினி விண்கலம், கடந்த ஜூன் மாதம் இந்த புகைப்படத்தை எடுத்தது.

No comments:

Post a Comment