புதிய சர்ச்சை : ஏலியன்கள் அனுப்பிய ‘மேசேஜ்கள்’..!
அளந்து பார்க்க முடியாத மாபெரும் முடியாத அண்டத்தில், பூமி கிரகத்தில் மட்டும் தான் உயிரினம் வாழ்கின்றது, வேறு எந்த வேற்று கிரகத்திலும் எந்த விதமான உயிரினமும் இல்லவே இல்லை என்பதற்கு எந்த விதமான அதிகாரப் பூர்வமான சான்றும் இல்லை.
நாசா நடத்தும் ஏலியன் வேட்டை..!
இது தான் வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்கள் என்று நம்புபவர்களின் அடிப்படை கொள்கை ஆகும்..!
ஏலியன்கள் இருப்பது உறுதி..!
அப்படியானவர்களின் நம்பிக்கையையே தவடு பொடியாக்கும் வண்ணம், ஏலியன்கள் சார்ந்த புதிய சர்ச்சை ஒன்று கிளம்பி உள்ளது. அது பற்றிய மேலும் பல தகவல்களை கீழ்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.
வேற்றுகிரக வாசிகள் பற்றி ஆயிரம் ஆயிரம் கதைகள் உண்டு. அந்த கதைகள் – உண்மை, பொய், கற்பனை, கட்டுக்கதை, சாட்சி, ஆதாரம், நம்பிக்கை, சந்தேகம் என்று – பல வகைகளில் பிரித்து பார்க்கப்படுகின்றன..!
ஏலியன்கள் : ‘மறைக்கப்படும்’ உண்மைகள்..!
அளவில் அடங்காத இவ்வளவு பெரிய அண்டத்தில் பூமி என்ற ஒரு கிரகத்தில் மட்டும் தான் உயிரினங்கள் உள்ளது என்பதை பெரும்பாலோனர்கள் ஏற்றுக்கொள்வதாய் இல்லை.
ஏலியன்கள் இருப்பது உறுதி..!
முக்கியமாக, ஸ்டீபன் ஹோக்கிங் போன்ற அண்டவியல் அறிஞர்கள் மற்றும் எல்லன் ஸ்டோஃபன் போன்ற நாசா விஞ்ஞானிகள், ஏலியன்கள் இல்லை என்பதை ஏற்றுக்கொள்வதாய் இல்லை..!

தேடல் : உலகின் பல நாடுகளும் வேற்றுகிரக வாசம் பற்றிய ஆராய்ச்சியில் இருந்து பின் வாங்காமல் செயல்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது..!

வரலாற்று பெருமை : ஏனெனில் முதலில் நிலாவிற்கு சென்ற நாடு, முதலில் செவ்வாய்க்கு சென்ற நாடு என்ற வரிசையில், முதலில் ஏலியன்களை கண்டுபிடித்த நாடு என்ற வரலாற்று பெருமையை அடைய ஒவ்வொரு நாடும் முயற்சிப்பதில் தவறு ஒன்றுமில்லை..!

உறுதி : 2025-ஆம் ஆண்டுக்குள் ஏலியன்கள் சார்ந்த அறிகுறிகளை நாசா நிச்சயமாக கண்டறியும் என்று நாசாவின் உயர்நிலை விஞ்ஞானியான எல்லன் ஸ்டோஃபன் உறுதியாக தெரிவித்துள்ளார்..!

உயிரினங்கள் : நாசா குழு, அண்டத்தில் வாழும் உயிரினங்கள் பற்றி மிகவும் பலமான ஆதாரங்களை திரட்ட இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்..!

கருத்து : எல்லனின் கருத்துக்கு ஆதரவாய் முன்னாள் விண்வெளி வீரர் மற்றும் நாசாவில் இணை நிர்வாகியாக பணிபுரியும் ‘ஜான் கிரன்ஸ்பெல்ட்’டும் கருத்து தெரிவித்துள்ளார்..!

உறுதி : ஏலியன் இருப்பு உறுதி என்பதை உணர்த்தும் வகையில் “பால்வழி மண்டலமானது நீரால் ஊறிப்போன ஒரு இடம்..!” என்று கருத்து தெரிவித்துள்ளார் நாசாவின் வான் இயற்பியல் துறையின் இயக்குநர் பால் ஹெர்ட்ஸ்.

ஏலியன் வேட்டை : வேற்றுகிரக வாசிகள் பற்றிய நிஜமான முதல் ஆதாரத்தை கண்டுபிடிக்கும் முனைப்பில், நாசா ஒரு பெரிய ஏலியன் வேட்டையையே நடத்திக் கொண்டிருக்கிறது என்பது மேற்க்கண்ட தகவல்கள் மூலம் உறுதியாகிறது..!
No comments:
Post a Comment