Wikipedia

Search results

Friday, 2 October 2015

முக்தி அடைய ஓர் எளிய வழி!

முக்தி அடைய ஓர் எளிய வழி!

Author: மதன்


மனிதன் பிறப்பில் இருந்து தன் வாழ் நாளில் செய்திடும் பாவபுண்ணியங்களின் பலன்களைப் பொறுத்து, இறப்புக்குப் பின்னர் மீண்டும் இவ்வுலகில் பிறந்து அவற்றை அனுபவிப்பதாக நமது சித்தாந்தங்கள் நம்புகின்றன. மனிதனின் பாவக் கணக்குகள் தீரும் வரையில் இந்த சுழற்சி தொடர்வதாகவும் கருதப் படுகிறது.இந்த சுழற்சியில் இருந்து விடுபட்டு குறைவில்லா இன்பத்துடன் இருந்திடும் ஒரு நிலைதான் முக்தி எனப் படுகிறது.
 
முக்தி நிலை என்பது மிக உயரிய குறிக்கோளாய் கூறபபடுகிறது.கடுமையான முயற்சி மற்றும் பயிற்சியினால் மட்டுமே ஒருவர் இந்த மேலான நிலையினை அடைந்திட முடியும்.யோகம் என்கிற எட்டு நிலைகளில் தேர்ந்து தெளிந்தால் மட்டுமே முக்தி நிலை சாத்தியமாகும்.இது பற்றி விரிவாக முந்தைய பதிவுகளில் அலசியிருக்கிறோம்.
 
இத்தகைய கடினமான முக்தி நிலையினை எட்டிடும் புதிய வழி ஒன்றினை பாம்பாட்டிச் சித்தர் தனது பாடலில் பின்வருமாறு விளக்குகிறார்.
 
 
திரளான போரில்ஊசி தேடல் போல்முத்தி
சிக்காது தேசாசார தேசிகர் தம்மால்
அருளான மூலகுரு அவர் செயலால்
ஆனந்தம் கண்டோம் என்று ஆடாய் பாம்பே!
 
- பாம்பாட்டிச் சித்தர் -
 
பரந்து விரிந்த போர்களத்தில் படைகள் ஆவேசத்துடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கும். அந்த இடத்தில் ஊசியப் போட்டுவிட்டு மீண்டும் தேடி எடுக்க முடியாது அது போல முக்தியும் இலகுவில் கிடைக்காது. எத்தனை முயற்சிகள் கஷ்டங்கள் பட்டாலும் முக்தி என்பது அத்தனை இலகுவாகக் கிடைத்துவிடாது.
 
அதே நேரத்தில் இந்த உலகம் முழுவதும் எங்கும் சஞ்சரிக்கும் சித்தர்களின் அருளையும், மூலகுருவின் அருளையும்,கருணையையும் வேண்டிப் பெறுவதன் மூலமே கிடைப்பதற்க்கு அறிய முக்தியைப் பெறமுடியும். இவர்களின் மேலான அருளால் முக்தியை உணர்ந்து, ஆனந்தம் கொண்டோம் என்று ஆடு குண்டலினிப் பாம்பே என்கிறார் பாம்பாட்டிச் சித்தர்.
 
மேன்மையான குருவருளை பெறுவதன் மூலமே ஒருவர் முக்தி நிலையினை அடைந்திட முடியும் என்பது பலருக்கும் புதிய செய்திதானே..
 
 
பின்குறிப்பு:
பாம்பாட்டிச் சித்தரின் பாடல்கள் எளிமையான மொழி நடையில் எவரும் புரிந்து கொள்ளும் வகையில் இருப்பது சிற்ப்பு. ஆனால் பாம்பாட்டி சித்தரின் 129 பாடல்கள் மட்டுமே நமக்கு கிடைத்திருக்கிறது என்பது கொஞ்சம் வருத்தமான செய்தியே..
 

posted from Bloggeroid

No comments:

Post a Comment