Wikipedia

Search results

Monday, 30 May 2016

How to reduce weight fast

உடல் எடையைக் குறைக்கும் உணவு முறை!
உடல் எடையைக் குறைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.

அதிக புரோட்டீன் சத்து கொண்ட அதே நேரத்தில் குறைவான கொழுப்புச் சத்து கொண்ட உணவினை உட்கொண்டாலே போதும் உடல் எடை குறையும். ஆனால் அவற்றைக் கடைபிடிப்பது தான் கடினமான ஒன்றாகும்.

உடலில் இருந்து அதிக கலோரி சக்தி வெளிப்படக்கூடிய வகையில் உடற்பயிற்சி செய்யலாம். அல்லது மொத்த உணவில் உள்ள கலோரியின் அளவைக் குறைக்கலாம். இவை எல்லாமே சொல்வதற்கு மட்டும் தான் எளிது.

ஒருபுறம் டயட்டில் இருக்கிறேன் என்று கூறிக் கொண்டு கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும்பட்சத்தில் உடல் குண்டுக்கு மேல் குண்டாக அதிகரித்துக் கொண்டே போகும். அமெரிக்காவில் சுமார் 64 சதவீதம் பேர் அதிக எடை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்களில் 23 சதவீதம் பேர் மிகமிக குண்டான தோற்றம் (
Obesit
y) கொண்டவர்கள் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

கனடாவைப் பொருத்தவரை 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் அதிக எடை கொண்டவர்களே. இங்கு 6 பேரில் ஒருவர் குண்டானவர்களாக இருக்கிறார்கள். இதிலிருந்து டயட
்,
உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பதெல்லாம் ஏட்டளவிற்குத்தான் என்பது தெளிவாகிறது.

ஆனால் நடைமுறைக்கேற்றவாறு அன்றாடம் உணவுமுறை மற்றும் உடற்பயிற்சியைக் கடைபிடித்தால
்,
பாதுகாப்பான முறையிலும
்,
நிரந்தரமாகவும் உடல் எடையைக் குறைக்க முடியும்.

அதற்கான சில டிப்ஸ். படித்து விட்டு பயனுள்ள தகவல் என்று மட்டும் கூறாமல
்,
பயன்படுத்தி பலன் அடையுங்கள்.

பொதுவாக உடலில் நமக்குச் தேவையான அளவு கலோரியை விட அதிக அளவில் கொழுப்பு சேர்ந்தாலே உடல் குண்டாகத் தோற்றம் அளிக்கிறது. தேவைக்கு அதிகமான கொழுப்பு உடலில் தேங்கியிருப்பதை கரைத்தலே எடை குறைப்பாகும்.

இதற்கு நீங்கள் சாப்பிடும் அளவு கலோரி சக்தியை விட உடலில் அதிக கலோரிகள் எரிந்து செயலாற்றச் செய்தல் வேண்டும். சாப்பிடும் அளவைக் காட்டிலும் அதிக அளவு சக்தியை உடல் பயன்படுத்திக் கொள்ளுமானால
்,
உடலில் ஏற்கனவே சேர்ந்திருக்கும் கொழுப்பைக் கரைக்க ஏதுவாகும். குறைவாக சாப்பிடும்போத
ு,
உடலுக்குத் தேவையான சக்தியானது கொழுப்பின் மூலம் எரிந்து எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதே நேரத்தில் நீங்கள் எந்தவகை உணவை சாப்பிடுகிறீர்கள் என்பதும் மிக முக்கியம்.

சாப்பிடும் உணவானது உங்களின் உடல் எடை குறைப்புத் திட்டத்திற்கு மையமாக அமைய வேண்டியது அவசியம். எடுத்துக் கொள்ளும் உணவு வகைகளினால் புற்றுநோய் போன்ற நோய்களில் இருந்து வாழ்நாள் முழுவதும் உங்களைப் பாதுகாக்க வேண்டியதும் அவசியம்.

மாமிசத்தில் அதிக அளவிலான கொழுப்பு உள்ளது. அதுவே பழ வகைகளில் குறைந்த கொழுப்பு உள்ளது. என்றாலும் குறுகிய கால உடல் எடை குறைப்புக்கு பழங்களை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

அதிக அளவில் மாமிசங்களை சாப்பிடுவதால் பல்

nறு வகையான நோய்கள் ஏற்படுகின்றன. அதே நேரத்தில் அதிக பழங்களைச் சாப்பிடுவதால் புற்றுநோயிலிருந்து தப்பிக்கிறீர்கள்.

பழங்கள
்,
காய்கறிகள
்,
முழுவதும் தானியங்களிலான உணவுகள
்,
குறைவான கொழுப்பு கொண்ட பால் உற்பத்திப் பொருட்கள் மற்றும் புரோட்டீன் உணவுகளே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உகந்தவை. எடையைக் குறைக்கும் தன்மை கொண்டவை. சில வகை உணவுகள் உங்களின் சக்தி தேவைக்கேற்ப இருப்பதுடன் உடனடியாக அதிக கொழுப்பை தருபவையாக அமைந்து விடலாம்.

கேக
்,
கொழுப்பு நிறைந்த மாமிசம
்,
பால
்,
கிரீம
்,
சாஸ் போன்றவற்றை அதிகமாக சேர்த்தல் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.

உடல் எடையைக் குறைப்பதற்காக சிலர் தடாலடியாக உணவினை குறைத்துக் கொண்ட
ு,
மெலிந்து பலவீனமான பின் மீண்டும் ஏற்கனவே இழந்ததற்கு மிச்சமாக அதிக அளவிலான உணவை எடுத்துக் கொள்வார்கள். இது தவறான அணுகுமுறை.

உடற்கூறு நிபுணர்கள் கருத்தின் பட
ி,
உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் படிப்படியாக எடையைக் குறைக்க முன்வர வேண்டும். பொதுவாக வாரம் ஒன்றுக்கு 450 கிராம் அளவிற்கே எடை குறைய வேண்டும். அப்போதுதான் உடலில் பாதிப்பு ஏற்படாது.

நாளொன்றுக்கு உங்களின் உணவு முறையில் சுமார் 500 கலோரி அளவுக்கு குறைவாக சாப்பிடுங்கள். இதன்மூலம் உடம்பில் ஏற்கனவே சேர்ந்திருக்கும் கொழுப்பில் இருந்து தேவையான கலோரிகள் அன்றாட சக்திக்காக எடுத்துக் கொள்ளப்படும். அல்லது 250 கலோரி குறைவாக சாப்பிடுவீர்களானால
், 250
கலோரி அளவிற்கு உடற்பயிற்சி செய்தும் குறைக்க முடியும்.

குறைவான கலோரி சாப்பிடுவதுடன் உடற்பயிற்சியும் செய்வதால் குறையும் உடல் எடை நீடித்து நிரந்தரமாக இருக்கும். பாதிப்பும் ஏற்படாது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

காலை உணவை கண்டிப்பாக சாப்பிடுங்கள். வெறும் வயிற்றில் இருந்தால் மதிய உணவின் போது அதிகம் சாப்பிடத் தூண்டும். அதே போல மதிய உணவைத் தவிர்க்காதீர்கள். குறிப்பிட்ட நேரத்தில் குறைந்த அளவாவது சாப்பிடுதல் வேண்டும். சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை குறைந்து விடும் என்று நினைப்பது அறியாமை.

உணவில் குறைவான கொழுப்புச் சத்துக்கள் உள்ளனவா என்பதை அறிந்து அவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். திடஉணவின் அளவை குறையுங்கள். அதிக அளவில் திரவ உணவுகளை உட்கொள்ளுங்கள். குறிப்பாக தண்ணீர் அதிக அளவில் குடியுங்கள்.

உங்களுக்குப் பிடித்தமான உணவு வீட்டில் சமைத்திருந்தாலும் தேவைக்கு அதிகமாக சாப்பிட முடியவில்லையே என்று ஏமாற்றம் அடையாதீர்கள். உங்களின் உடல் எடை குறைகிறதா என்பதை குறிப்பிட்ட இடைவெளியில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

சாப்பிடாமல் இருந்து உடல் எடையைக் குறைக்கலாம் என்று கருதுவீர்களானால
்,
அது உடல் பலவீனத்தையும
்,
நோயையும் கொண்டு வந்து சேர்க்கும்.

சிரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஸ்லிம் ஆகுங்கள்!

Best os for hacking

Best operating system used for
Hacking
வணக்கம் நண்பர்களே இன்று நாம்
ஹாக்கிங் செய்ய எந்த வகையான
இயங்குதளம் மிக பயனுள்ளதாக
இருக்கும் என்று
பார்க்கலாம்.முதலில் ஹாக்கிங்
என்றால் என்னவென்றும் ஹாக்கர்ஸ்
என்பவர் யார் என்பதையும் நீங்கள்
நன்றாக புரிந்துகொள்ள
வேண்டும்.
ஹாக்கிங் என்பது ஒரு கலை
அதனை யார் வேண்டும் என்றாலும்
கற்றுகொள்ளலாம் அதற்கு தேவை
ஆர்வம் மட்டுமே.உங்களின் மனதில்
தோன்றலாம் எங்கு நான் ஹாக்கிங்
படிப்பது எந்தவகையான
கருவிகளை உபயோகிப்பது
என்று.உங்கள் அனைவருக்கும்
என்னுடைய பதில்
ஒன்றுதான்.ஹாக்கிங்
கற்றுத்தரப்படும் என்று பொய்யாக
விளம்பரம் செய்யும் கணினி
பயிற்சி மையங்களை நம்பி
ஏமாறாதீர்கள்.மாறாக நம் கைவசம்
இணையம் உள்ளது அதில் கற்று
கொள்ள முடியாததையா கணினி
பயிற்சி மையத்தில் கற்று தர
போகிறார்கள்.ஹாக்கர்ஸ் என்பவர்கள்
அனைவரும் தவறானவர்கள் என்ற
எண்ணம் உங்கள் மனதில் இருந்தால்
அதை உடனே அகற்றிவிடுங்கள் ஏன்
என்றால் ஹாக்கர் என்பவர்
கணினியின் செயல்பாடுகளை
தரவாக அறிந்தவர் அக்கணினி
எவாரெல்லாம் செயல்படுகின்றது
என்று தெளிவாக கற்று
கொண்டவர்.அதன் செயல்பாடுகளை
மாற்றி அமைக்கவும் முடக்கவும்
இவரால் முடியும்.நண்பர்களே இந்த
ஹாக்கர்ஸ் மட்டும் இல்லை என்றால்
இன்று நாம் உபயோகிக்கும்
அனைத்து தொழில்நுட்பங்களும்
இல்லை என்றுதான் கூர
வேண்டும்.ஆம் நண்பர்களே இன்று
நாம் உபயோகிக்கும் முகநூல்
(FACEBOOK) இதன் உரிமையாளர் மார்க்
ஜூகர் பெர்க் ஒரு ஹாக்கர்
ஆவார்.நாம் அனைவரின் விருப்ப
தேர்வான விண்டோஸ் இயங்குதளம்
அதன் உரிமையாளர் பில்கேட்ஸ் ஒரு
ஹாக்கர் ஆவார் இவர்களை போன்று
நிறைய நபர்களை
பட்டியலிடலாம்.எனவே நீங்களும்
இவர்களைவிட மிகப்பெரிய ஹாக்கர்
ஆக வேண்டும் என்றால் உங்களின்
ஆர்வத்தை தொழில்நுட்பத்தின் மீது
திருப்புங்கள்.சரி நண்பர்களே
ஹாக்கிங் செயல்படுத்த எந்த
வகையான இயங்குதளம்
அருமையாக இருக்கும் என
என்னுடைய அனுபவத்தை
கொண்டு கூறுகிறேன் நீங்கள்
விண்டோஸ் பயனாளராக இருந்தால்
லினக்ஸ் இயங்குதளத்திற்கு
மாறவேண்டிய தருணத்திற்கு
வந்துவிட்டீர்கள் ஆம் நண்பர்களே உலக
அளவில் லினக்ஸ்
இயங்குதளத்தினை கொண்டே
ஹாக்கிங் செயல்பாடுகள்
மேற்கொள்ளப்படுகின்றன.
அப்படிப்பட்ட லினக்ஸ் இயங்குதளங்கள்
சிலவற்றை நான் கீழே
கொடுத்துள்ளேன்.
Best-operating-system-used-for-Hacking1
Kali Linux ஐ நான் முதலில்
உங்களுக்கு
பரிந்துரைக்கிறேன்.இதுதான்
ஊடுருவல் சோதனையில் (penetration
testing) முன்னிலையில் உள்ள
இயங்குதளம்.இந்த இயங்குதளத்தின்
சிறப்பு என்னவென்றால் இதில்
உள்ள ஹாக்கிங் கருவிகள் யாவும்
பாதுகாப்பு விரும்பிகளால் அதிக
அளவில்
உபயோகிக்கபடுகின்றது.இதில்
உள்ள ஹாக்கிங் கருவிகள் யாவும்
ஹாக்கிங்ல் கைதேர்ந்த
வல்லுனர்களால் உருவாக்கப்பட்டவை
அவை அனைத்தும் திரமூல
பயன்பாட்டு உரிமத்தின்
அடிப்படையில்
வெளியிடப்பட்டுள்ளது. 300க்கும்
அதிகமான கருவிகள் பதிந்தே
தரப்படுகிறது.மேலும் புதிய
ஹாக்கிங் கருவிகள் ஒவ்வொரு
நாட்களும் புதிப்பிக்கப்பட்டு அதன்
மாற்று பதிப்பு நமக்கு
கிடைக்கின்றது.நான் Kali Linux தான்
உபயோகிக்கின்றேன்.கிழே உள்ள
இணைப்பில் Kali Linux ஐ தரவிறக்கம்
செய்துகொள்ளவும்.
Download Now
Best-operating-system-used-for-Hacking1
BackTrack 5r3 ஐ பற்றி கூறியே
ஆகவேண்டும் ஆம் நண்பர்களே நீண்ட
நாட்களாக பாதுகாப்பு மற்றும்
ஊடுறுவல் சோதனைதுறையில்
தடம் பதித்த இயங்குதளம் என்றே கூர
வேண்டும்.அவ்வலவுதூரம் இதன்
செயல்பாடுகள் பாதுகாப்பு
துறைக்கு
பயனளித்துள்ளது.BackTrack முதலில்
live Linux வழங்கலாக Whoppix, IWHAX, and
Auditor என்ற பெயரினைகொண்டு
வெளிடப்பட்டது.இதுவே
இன்றளவும் உலகில் உள்ள
ஊடுருவல் சொதனையாலர்களால்
அதிக அளவில்
பயன்படுத்தப்படுகிறது.கீழே உள்ள
இணைப்பில் இருந்து தரவிறக்கி
கொள்ளலாம்.
Download Now
Best-operating-system-used-for-Hacking1
BackBox என்பது ஒரு லினக்ஸ்
வழங்கல் ஆகும் இது உபுண்டு
லினக்ஸ் ஐ அடிப்படையாக வைத்து
உருவாக்கப்பட்டது இதுவும்
ஊடுருவல் சோதனை மற்றும்
பாதுகாப்பு பணிகளை
மேற்கொள்ள பயன்படுகிறது.இதன்
ஒவ்வொரு பதிப்பும் நிலையான
பதிப்பாகவே
வெளியிடப்படுகின்றது.கீழே உள்ள
இணைப்பை பயன்படுத்தி
தரவிறக்கி கொள்ளவும்.
Download Now
Best-operating-system-used-for-Hacking1
Samurai Web Testing Framework என்பது
இணைய பக்கங்களை ஊடுருவல்
சோதனை செய்துபார்ப்பதர்காக
நிகழ்நிலை லினக்ஸ் சூலலை
வழங்குகின்றது.இதன் வட்டினை
உபயோகிதலின் மூலம் நாம் மிக
சிறப்பான இணையபக்க ஊடுருவல்
சோதனை அனுபவத்தை பெற
முடியும்.இதன் கருவிகள்
அனைத்தும் பாதுகாப்பு
சோதனை பயிற்சிக்காக
உபயோகிக்க படுகின்றது.கீழே
உள்ள இணைப்பில் தரவிறக்கி
கொள்ளவும்.
Download Now
Best-operating-system-used-for-Hacking1
NodeZero Linux ஊடுருவல் சோதனை
மற்றும் பாதுகாப்பு துறையின்
சிறப்பு வாய்ந்த இயங்குதளம்
ஆகும்.இதனை கொண்டு
நம்முடைய எண்ணங்கள்
அனைத்தையும் நிறைவேற்றி
கொள்ள முடியும்.அனைத்து
வகையான ஹாக்கிங் கருவிகளும்
ஒரே இயங்குதளத்தில் பதிந்து
தரப்படுகிறது.இதன் சிறப்பம்சமே
இதன் ஒவ்வொரு பதிப்பும்
நிலையான பதிப்பாக
வெளியிடப்படுகின்றது.மேலும்
ஹாக்கிங் ஈடுபாட்டில் இது
வலிமையான
இயங்குதளமாகும்.கீழே உள்ள
இணைப்பினை பயன்படுத்தி
தரவிறக்கி கொள்ளவும் .
Download Now
Best-operating-system-used-for-Hacking1
Knoppix STD என்பது லினக்ஸ்
இயக்கமுறைமை அல்ல லினக்ஸ் ஐ
அடிப்படையாக வைத்து
உருவாக்கப்பட்ட பாதுகாப்பு
கருவி ஆகும்.இதில் உள்ள
கருவிகள் யாவும் திரமூல
பயன்பாடாக வெளியிடப்படவில்லை
ஒருசில கருவிகள் மட்டுமே
திரமூல பயன்பாடாக
வெளியிடப்பட்டுள்ளது.இது ஒரு
நிகழ் வட்டாக
வெளியிடப்பட்டுள்ளது இதனை
உங்களின் கணினியில் பதிந்து
உபயோகிக்க அவசியமில்லை
உங்களிடம் ஒரு குறு வட்டு
இருந்தாலே போதுமானது.கீழே
உள்ள இணைப்பை பயன்படுத்தி
தரவிறக்கி கொள்ளவும்.
Download now
Best-operating-system-used-for-Hacking1
CAINE (Computer Aided INvestigative
Environment) என்பது ஒரு இத்தாலி
குனு/லினக்ஸ் நிகழ்நேர
வழங்கலாகும்.இது ஒரு Digital
Forensics
CAINE என்ற அமைப்பின் திட்டம்
(ப்ராஜெக்ட்)ஆகும்.இது நமக்கு
எளிமையான இயக்க சூழலை
நமக்கு வழங்குகின்றது.கீழே உள்ள
இணைப்பை பயன்படுத்தி
தரவிறக்கம் செய்து கொள்ளவும்.
Download Now
Parrot Security OS
Parrot Security OS என்பது பாதுகாப்பு
சம்பந்தமானசோதனை செய்ய
பயன்படும் இயங்குதளம் ஆகும்.
மேலும் இது ஊடுருவல்
சோதனைக்காகவும்,கணினி
தடயவியளுக்காகவும்(Forensic)
பயன்படுகின்றது.இதனை
கொண்டு மேககணினி(Cloud
computing) செயல்பாடுகளில்
ஊடுருவல் சோதனை செய்ய
முடியும். இது Debian வழங்கலை
கொண்டு Frozenbox network ஆல்
வடிவமைக்கப்பட்டது.கீழே உள்ள
இணைப்பை பயன்படுத்தி
தரவிறக்கி கொள்ளவும்.
Download Now
பயனுள்ள பதிவாக இருந்தால்
பின்னூட்டம் அளிக்கவும்....!!!
நன்றி.